22 ஆண்டுகளுக்கு பின்னர் தெ.ஆ அணிக்கு எதிராக கோலி மற்றும் ரகானே செய்த சாதனை என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. கோலி ஆட்டமிழக்காமல் 254 குவித்தார். ஜடேஜா 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை குவித்துள்ளது.

இந்த போட்டியில் கோலி மற்றும் ரஹானே ஜோடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த சாதனை யாதெனில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இதற்கு முன்னர் 1996-97 இல் நடந்த டெஸ்ட் போட்டியில் டிராவிட் மற்றும் கங்குலி இணைந்து ஜோகன்னஸ்பர்க்கில் 145 ரன்கள் அடித்ததே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 4-ஆவது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது.

Kohli 1

அதனை இன்று கோலி மற்றும் ரஹானே கடந்து 178 ரன்கள் இன்றைய போட்டியில் பாட்னர்ஷிப் அமைத்து குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement