புத்தாண்டு கொண்டாட்டத்தை துவங்கிய விருஷ்கா ஜோடி- வைரல் புகைப்படம் இதோ

anushka

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை 2017ஆம் ஆண்டு இத்தாலியில் காதல் திருமணம் செய்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்த ஜோடி காதல் ஜோடிகள் ஆகவே உலகம் சுற்றி வருகிறது. இந்திய அணி எந்த நாட்டுக்கு விளையாட சென்றாலும் இந்திய அணியுடன் அனுஷ்கா செல்வது வழக்கம்.

viratanushka

மேலும் அவ்வாறு பயணம் செய்யும் அனுஷ்கா மைதானத்திற்கு வந்து வீரர்களை உற்சாகப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இதுபோன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அங்கு உள்ள இடங்களுக்கு சுற்றுலா சொல்வதையும் விருஷ்கா ஜோடி வழக்கமாக வைத்துள்ளார்கள்.

மேலும் அவ்வாறு ஆங்காங்கே எடுக்கப்படும் புகைப்படத்தை தங்களது சமூக வலைத் தளத்தில் பதிவிடுவதையும் அவர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கல். இந்நிலையில் தற்போது அடுத்த இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர் இந்திய அணிக்கு இரண்டு வாரங்கள் வரை ஓய்வு கிடைத்ததால் தற்போது இந்த ஜோடி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கிளம்பிவிட்டது.

புத்தாண்டினை எங்கு கொண்டாடப் போகிறார்கள் என்ற தகவல் இல்லை என்றாலும் தற்போது அவர்கள் சுவிட்சர்லாந்தில் பணிசறுக்கில் ஈடுபட்டு விளையாடியதை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது இந்த ஜோடி சுவிட்சர்லாந்தில் இருப்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -