ஆர்.சி.பி அணியில் என்ன நடந்தாலும் இதுமட்டும் நடக்காது – கோலி, ஏ.பி.டி உறுதி

- Advertisement -

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற இருந்த பதிமூன்றாவது சீசீசன் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தினால் காலவரையறையின்றி ஐபிஎல் டி20 தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.

rcb

- Advertisement -

அதனைத் தொடர்ந்து மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் பல மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த வீரர்கள் இந்த ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் தங்களது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

சமூகவலைத்தளம் மூலமாக பல வீரர்களும் தங்களது அன்றாட செயல்கள் மற்றும் கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பேசுவது என ஆக்டிவாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்க அணியின் வீரரான டி வில்லியர்ஸ் இன்ஸ்டாகிராமில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியுடன் கலந்துரையாடினார்.

அதில் கோலி ஏ.பி.டி டிவில்லியர்ஸ்ஸிடம் பேசியதாவது : பெங்களூர் அணியுடனான எனது பயணம் அற்புதமானது உங்களுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வேண்டும் அதுவே எனது கனவு. பெங்களூர் அணியை விட்டு பிரியும் சூழல் எப்போதும் ஏற்படாது. ஐபிஎல் இருக்கும் வரை நான் விளையாடும் வரை பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இப்போது நடைபெறவில்லை.

- Advertisement -

ஆனாலும் பெங்களூரு அணியின் ரசிகர்கள் தரும் ஆதரவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதே கருத்தை ஆதரித்து பேசிய டிவில்லியர்ஸ் கூறுகையில் : எனக்கும் பெங்களூர் அணியை விட்டு செல்ல மனமில்லை நான் நிறைய ரன்கள் குவிக்க வேண்டும். ஆனாலும் நான் கேப்டன் இல்லையே என்றார் வேடிக்கையாக.

ABD

தொடர்ந்து பேசிய கோலி பெங்களூர் அணிக்காக நிறைய ரன் குவிக்க வேண்டும். மேலும் ஒருவர் ஒரு சீசனில் 500 முதல் 600 ரன்களை குவித்து சாதிக்க வேண்டும் அதுவே என் விருப்பம் என்றும் கோலி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

Advertisement