IND vs WI : இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு கொரோனா உறுதி – டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

IND
- Advertisement -

இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று முடித்த வேளையில் இரண்டு தொடர்களையுமே இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

INDvsWI

- Advertisement -

இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் இளம் வீரரான கே.எல் ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்ட வேளையில் டி20 தொடரில் விளையாடுவார் என்று அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரை தவறவிட்ட அவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரையும் தவறவிட்டார்.

அதன் பிறகு ஜெர்மனி சென்று தனது காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட ராகுல் கடந்த சில வாரங்களாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் உடற்தகுதியை எல்லாம் நிரூபித்த வேளையில் தற்போது இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் பயணிக்கும் இந்திய அணி வீரர்களுடன் ராகுலும் செல்வார் என்று கூறப்பட்டது.

kl rahul

ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக நடைபெற்ற மூன்றாவது கட்ட கொரோனா பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியுடன் பயணிப்பது சந்தேகமாகியுள்ளது.

- Advertisement -

எனவே இதன் காரணமாக அவரால் இந்த டி20 தொடரில் விளையாட முடியாமல் போகும் நிலையும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 30 வயதான கே.எல் ராகுல் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக 42 டெஸ்ட் போட்டிகள், 42 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 56 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs WI : ஷிகர் தவனுடன் ஓப்பனிங் களமிறங்க அவரே தகுதியானவர் – பார்மில் இல்லாத வீரருக்காக வாசிம் ஜாபர் கோரிக்கை

கே.எல் ராகுலுக்கு ஏற்பட்டுள்ள இந்த கொரோனா தொற்றானது சரியாக இன்னும் சில வாரங்கள் பிடிக்கலாம் என்பதனால் அவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணிப்பதும், இந்த டி20 தொடரில் பங்கேற்பதும் சந்தேகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement