- Advertisement -
இந்திய கிரிக்கெட்

78 ரன்ஸ்.. இந்தியாவுக்காக 1946க்குப்பின் 79 வருடங்கள் கழித்து ராகுல் – ஜெய்ஸ்வால் ஜோடி மான்செஸ்டரில் அபார சாதனை

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி, கருண் நாயர், ஆகாஷ் தீப் ஆகியோர் விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக அறிமுக வீரர் அன்சுல் கம்போஜ், தமிழக வீரர் சாய் சுதர்சன், சர்துள் தாகூர் ஆகியோர் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். ஆரம்பக்கட்ட ஸ்விங் பந்துகளை அடிக்காமல் தவற விட்ட அந்த ஜோடி மிகவும் நிதானமாக பேட்டிங் செய்தது.

- Advertisement -

79 வருடங்கள் கழித்து:

அதில் ஒரு பந்தை எதிர்கொண்ட ஜெயஸ்வால் பேட் இரண்டாக உடைந்தது. ஆனால் அப்போதும் தம்முடைய தடுப்பாட்டத்தை உடைக்க விடாத அளவுக்கு இங்கிலாந்துக்கு சவாலாக பேட்டிங் செய்த அவர் இந்தியா 50 ரன்கள் தாண்ட உதவினார். அதே போல மறுபுறம் கேஎல் ராகுல் விக்கெட்டை விடாமல் நிதானமாக விளையாடி அசத்தினார்.

அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் முதல் நாள் உணவு இடைவெளியில் இந்தியா 78/0 ரன்கள் எடுத்துள்ளது. இதன் வாயிலாக மான்செஸ்டர் மைதானத்தில் 79 வருடங்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 50+ ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி அந்த சாதனையை ராகுல் – ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்கள். கடைசியாக 1946ஆம் ஆண்டு அங்கே இங்கிலாந்துக்கு எதிராக விஜய் ஹசாரே – சயீத் முஸ்தாக் அலி ஆகியோர் 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

- Advertisement -

கில் – ஜெய்ஸ்வால் அசத்தல்:

அவர்களுக்குப் பின் கடந்த 79 வருடங்களில் வேறு எந்த இந்திய ஓப்பனிங் ஜோடியாலும் இங்கே 50 ரன்கள் கூட பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. ஆனால் அதை இன்று செய்து காட்டியுள்ள ஜெய்ஸ்வால் 36*, ராகுல் 40* ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்ற இங்கிலாந்து ஒரு விக்கெட்டை கூட பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தது.

இதையும் படிங்க: அவரை எதுக்கு இப்போ டீம்ல சேத்தீங்க.. இந்திய அணித்தேர்வின் மீது ரசிகர்கள் அதிருப்தி – விவரம் இதோ

இங்கிலாந்து 10 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இப்படி முதல் நாள் உணவு இடைவெளிக்கு முன் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் பின்னடைவை சந்தித்துள்ளது. கடைசியாக 2015 ஆஷஸ் தொடரில் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தான் இங்கிலாந்து உணவு இடைவெளிக்குள் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா தொடர்ந்து விளையாட உள்ளது.

- Advertisement -