தோனியின் ஓய்வை அடுத்து இந்திய அணியின் புதிய நிரந்தர விக்கெட் கீப்பர் இவர்தான் – பி.சி.சி.ஐ தேர்வு

Pant

சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வினை அறிவித்துவிட்டார். கிட்டத்தட்ட 16 வருடங்கள் அணியில் ஒரு முக்கிய தூணாக விளங்கினார். தோனி ஒரு கேப்டனாக, ஒரு விக்கெட் கீப்பராக, ஒரு அதிரடி பேட்ஸ்மேன் ஆக மூன்று பேருக்கான வேலையை ஒரே வீரராக செய்து வந்தார். இப்போது திடீரென அணியில் இருந்து ஓய்வை அறிவித்து விலகி விட்டார்.

Dhoni

இந்நிலையில் தோனியின் அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். தோனியின் இடத்தை நிரப்ப கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி போராடி வருகிறது. இதற்காக ரிஷப் பந்த், கே எல் ராகுல், சஞ்சு சாம்சன், சஹா போன்ற பல விக்கெட் கீப்பர்கள் களம் இறக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் தோனி இடம் அப்படியே வெற்றிடமாக இருக்கிறது .

கடந்த இரண்டு வருடமாக ரிஷப் பந்த் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து அவர் சமீபகாலமாக சொதப்பி வருகிறார். இதன் காரணமாக அவருக்கு மாற்றாக ராகுல் களமிறக்கப்பட்டார். நன்றாக விக்கெட் கீப்பிங் செய்தார். அதிரடியாக ஆறாவது இடத்தில் விளையாடினார். துவக்க வீரராக அதிரடியாக ஆடினார்.

கேஎல் ராகுல் இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக இந்திய அணியை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் மங்கியா, எம்எஸ்கே பிரசாத், தீப் தாஸ் குப்தா ஆகியோர் பேசியுள்ளனர். அவர்கள் கூறுகையில்…

- Advertisement -

Rahul

டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் பொருத்தவரையில் கேஎல் ராகுல் தான் டோனியின் இடத்தை நிரப்ப போகிறார் என்று நினைக்கிறேன். நான் பார்த்த வரையில் அவர் விக்கெட் கீப்பிங் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. அவர் விக்கெட் கீப்பராக நின்றவுடன் அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.