LSGvsPBKS : என்னதான் நாங்கள் ஜெயிச்சிருந்தாலும் முட்டாள் தனம் பண்ணிட்டோம் – கே.எல் ராகுல் வெளிப்படை

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அகர்வால் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 153 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Quinton De Kock LSGjpeg

- Advertisement -

எளிய இலக்கினை சேசிங் செய்த பஞ்சாப் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக லக்னோ அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி குறைந்த அளவிலேயே ரன்களை அடித்தாலும் அதை வைத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அருமையான வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த இலக்கு எட்டக்கூடிய இலக்காக இருந்தாலும் லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் தேவைப்படும் நேரத்தில் சரியாக விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்ததால் பஞ்சாப் அணியால் எந்த ஒரு கட்டத்திலும் இலக்கை நோக்கி செல்ல முடியாமலேயே தோல்வியை சந்தித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கே.எல் ராகுல் கூறுகையில் :

LSG vs PBKS

முதல் இன்னிங்சில் போது நாங்கள் பேட்டிங்கில் முட்டாள்தனமான ஆட்டத்தை விளையாடி விட்டோம். பேட்டிங்கில் எங்களது வீரர்கள் மோசமாக செயல்பட்டதால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். ஏனெனில் டி காக் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்த போது நிச்சயம் புத்திசாலித்தனமாக விளையாடி இருந்தால் 180 முதல் 190 ரன்கள் வரும் வரை வரும் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் இடையில் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியாமல் போனது. தவறான ஷாட்டுகளை விளையாடி நாங்கள் பேட்டிங்கில் பெரிய முட்டாள்தனம் செய்துள்ளோம். ஆனாலும் பந்துவீச்சில் பஞ்சாப் அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : 8 போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் அணியில் முக்கிய பவுலரை இணைத்த மும்பை இந்தியன்ஸ் – யார் அவர்?

இந்த தொடர் முழுவதுமே க்ருனால் பாண்டியா எங்களுக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தேவைப்படும் நேரத்தில் அவர் எங்களுக்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி தருகிறார் என்றும் பேட்டிங்கில் முட்ட்டாள் தனம் செய்திருந்தாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி என்றும் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement