எங்களது திட்டம் சரியாக இருந்தது. கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றிக்கு அதுவே காரணம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

rahul 1
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 45 வது லீக் போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் 67 ரன்களையும், த்ரிப்பாதி 34 ரன்களையும், நிதீஷ் ராணா 31 ரன்களையும் குவித்தனர்.

kkrvspbks

- Advertisement -

அதன்பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றது. ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்க்க 40 ரன்கள் எடுத்த நிலையில் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த நிக்கலஸ் பூரன் 12 ரன்களிலும், மார்க்ரம் 18 ரன்களிலும், ஹூடா 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இருப்பினும் இறுதி வரை நின்ற ராகுல் 67 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இறுதி நேரத்தில் 9 பந்துகளை சந்தித்த தமிழக வீரர் ஷாருக்கான் 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என 22 ரன்கள் விளாசி பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

sharukh

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் எந்தவித முயற்சியும் எடுக்காமல் ப்ராப்பர் கிரிக்கெட்டை விளையாடினோம். எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு தெளிவான ரோல் வழங்கப்பட்டது.

- Advertisement -

rahul

எனவே இந்த போட்டியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து போட்டியை இறுதி வரை கொண்டு சென்று வெற்றியும் பெற்றுள்ளோம். இந்த வெற்றி நிச்சயம் தொடரும் எனவும் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாங்க இந்த விஷயத்துல செய்ஞ்ச தப்பு தான். பஞ்சாப் அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – மோர்கன் புலம்பல்

எங்கள் அணி ஒரு சிறப்பான அணி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாங்களே எங்கள் மீது அழுத்தத்தை போட்டுக் கொண்டதால் நிறைய போட்டிகளை தவற விட்டோம். நிச்சயம் இனி வரும் போட்டிகளில் நாங்கள் இறுதிவரை போராடுவோம். எங்களுடைய பெஸ்ட்டை நாங்கள் வழங்க தயாராக உள்ளோம் எனவும் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement