நாங்க இந்த விஷயத்துல செய்ஞ்ச தப்பு தான். பஞ்சாப் அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – மோர்கன் புலம்பல்

Morgan-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 45-வது லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது வெங்கடேஷ் ஐயர், த்ரிப்பாதி மற்றும் நித்தீஷ் ராணா ஆகியோர் சிறப்பான ஆட்டம் காரணமாக முதல் 15 ஓவர்களில் நல்ல ரன் குவிப்பில் இருந்தது.

kkrvspbks

- Advertisement -

அதன் பின்னர் வந்த இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் டிம் சைபர்ட் ஆகியோரது சொதப்பலான ஆட்டத்தினால் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 165 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக துவக்க வீரர்கள் ராகுல் 67, ரன்களும் மயங்க் அகர்வால் 40 ரன்களும் குவித்தனர். அதேபோன்று தமிழக வீரரான ஷாருக்கான் கடைசி நேரத்தில் 9 பந்துகளில் 2 சிக்ஸர் ஒரு மற்றும் ஒரு பவுண்டரி என 22 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

sharukh

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டிகள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. பல கேட்ச்களை தவற விட்டோம். அதுதான் இந்த போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

rahul

போட்டியின் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாகவே போராட்டத்தை அளித்திருந்தோம். பேட்ஸ்மேன்கள் இன்னும் நிறைய ரன்களை குவித்து இருக்கவேண்டும். இந்த மைதானத்தில் இது வெற்றிக்கு போதுமானதாக போதுமான ஸ்கோர் கிடையாது.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா இடத்திற்கு இவர் மாற்று வீரராக வருவார். அற்புதம் இவர் – சுனில் கவாஸ்கர் புகழாரம்

அதுமட்டுமின்றி முக்கியமான நேரத்தில் நாங்கள் தவறவிட்ட சில முக்கியமான கேட்ச்களும் இந்த போட்டியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன என மோர்கன் வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement