வெற்றிக்கு பிறகு தமிழக வீரர் ஷாருக்கானை புகழ்ந்து பேசிய கே.எல்.ராகுல் – என்ன சொன்னார் தெரியுமா ?

Sharukh-1
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான 45-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 165 ரன்களை குவிக்க பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இறுதியில் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

kkrvspbks

இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் ராகுல் மட்டும் நிலைத்து நிற்க மிடில் ஆர்டரில் பூரன், மார்க்கம், ஹூடா என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதி நேரத்தில் ஒரு இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது பஞ்சாப் அணிக்காக களம் இறங்கிய தமிழக அதிரடி வீரரான ஷாருக்கான் 9 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என அட்டகாசமாக 22 ரன்களை குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினார்.

- Advertisement -

அவரது இந்த இன்னிங்ஸ் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து போட்டி முடிந்து பேசியுள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : ஷாருக்கான் ஒரு பிரில்லியன்ட்டான பேட்ஸ்மேன் என்பது வலைப்பயிற்சியில் நாங்கள் பார்த்தோம். அது மட்டுமின்றி அவர் எவ்வளவு வலிமையான பிளேயர் என்பது இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் அனைவருமே பார்த்ததுதான்.

sharukh

எப்போது பேட்டிங் பயிற்சி எடுத்தாலும் என்னிடம் வந்து ஏகப்பட்ட கேள்விகளை அவர் கேட்பார். மேலும் அவருக்கு போட்டியை வெற்றிகரமாக பினிஷிங் செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அது குறித்தும் என்னிடம் அதிகம் விவாதிப்பார். இன்று அவர் விளையாடிய விதம் ப்ராப்பரான கிரிக்கெட் ஷாட்களாக அமைந்தன. நிச்சயம் அவரால் சில பவுண்டரிகளை குவிக்க முடியும் என்றும் எளிதாக அவரால் பந்தை சிக்சருக்கு விரட்ட முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும்.

- Advertisement -

இதையும் படிங்க : எங்களது திட்டம் சரியாக இருந்தது. கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றிக்கு அதுவே காரணம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

அந்த வகையில் இன்று அவர் எங்களுக்காக சிறப்பான இன்னிங்சை விளையாடி உள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு அணிக்காக பல போட்டிகளை அவர் பினிஷ் செய்து கொடுத்துள்ளார். அந்த வகையில் ஷாருக்கானின் ஆட்டம் இன்று மிக முக்கியமாக அமைந்தது என கேஎல் ராகுல் அவரைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement