- Advertisement -
ஐ.பி.எல்

இந்த 7-8 வருஷத்துல இவர் இவ்வளவு வெறியோடு பேட்டிங் செய்து நான் பார்த்ததே இல்ல – கே.எல் ராகுல் வெளிப்படை

ஐபிஎல் தொடரில் 46 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் கில் 57 ரன்களையும் கேப்டன் இயான் மோர்கன் 40 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் 150 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மந்தீப் சிங் 66 ரன்களையும், கெயில் 51 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய ராகுல் க்றிஸ் கெயில் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரின் ஆரம்பத்தில் பல போட்டிகளில் நான் கிரிஸ் கெயிலை விளையாட வைக்காதது ஒரு கடினமான முடிவாக அமைந்தது. ஏனெனில் தற்போது அவர் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி சிங்கிள் மற்றும் டபுள்ஸ் என ரன்களை அவர் ஓடி எடுக்கிறார். தற்போது அவர் பாசிட்டிவ் எண்ணத்தோடு விளையாடி வருகிறார்.

அவரின் செயல்பாடு இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமாக அமைகிறது. அதுமட்டுமின்றி கடந்த 7 – 8 வருஷத்தில் நான் அவரை பார்த்ததை விட தற்போது ரன்களை குவிக்க அவர் அதிக வேட்கையுடன் காணப்படுகிறார். ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு மிகப்பெரிய வீரரை எங்கள் அணியில் வைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த பலம் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது..

- Advertisement -
Published by