இந்த தொடரில் முதல் 4 போட்டியில் ரவி பிஸ்நோயை விளையாட வைக்காததன் காரணம் இதுதான் – ராகுல் விளக்கம்

Bishnoi
- Advertisement -

நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் மும்பை பேட்டிங் செய்தது. மும்பை அணியில் ரோகித் சர்மா மட்டுமே மிக சிறப்பாக விளையாடினார். மற்ற அனைவரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை அதன் காரணமாகவே அந்த அணி 20 ஓவர் முடிவில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் 60 ரன்கள் அடிக்க, பின்னர் கிறிஸ் கெயில் 43 ரன்கள் அடிக்க அந்த அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 17.3 ஓவர்களில் மிக எளிதாக வெற்றி பெற்றது. இந்த வெற்றி பஞ்சாப் அணியின் இரண்டாவது வெற்றியாக அமைந்தது.

நேற்றைய போட்டியில் இந்த தொடரில் முதல் முறையாக ஸ்பின் பவுலர் ரவி பிஷ்னோய் களமிறங்கினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நன்றாக பந்து வீசி அவரை இதற்கு முந்தைய நான்கு போட்டிகளில் ஏன் விளையாட வைக்கவில்லை என்று கே எல் ராகுல் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.

bishnoi 2

அதற்கு பதிலளித்துள்ள கே எல் ராகுல், ரவி பிஷ்னோய் மிகத் துணிச்சலான அவரை நாங்கள் வேண்டுமென்றே முதல் நான்கு போட்டிகளில் களம் இறக்க வில்லை என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. அவரிடம் ஒரு சில குறைகள் இருந்தது. அதை அவர் சரி செய்ய சிறிது காலம் தேவைப்பட்டது. அவர் அனில் கும்ப்ளே உடன் இணைந்து தன்னுடைய தவறுகளை மிக நேர்த்தியாக சரி செய்து கொண்டார். அவர் வந்தால் விக்கெட் எடுக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவரை சரி செய்ய நினைத்தோம். அதன்படி நேற்றைய போட்டியில் விளையாட அவர் முழுத் தகுதியுடன் இருந்தார்.

bishnoi 1

அவரை நேற்றைய போட்டியில் களம் இறக்கினோம் நாங்கள் நினைத்தது போல தன்னுடைய முதல் போட்டியிலேயே மிக நன்றாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி எங்களது வெற்றியில் ஒரு முக்கிய பங்கை அவர் கொடுத்துள்ளார். இனி வரும் போட்டிகளில் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் அவரை நிச்சயமாக விளையாட வைப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement