இந்த ஒரு விஷயத்துல நாங்க ரொம்பவே தப்பு பண்ணிட்டோம். அதுவே தோல்விக்கு காரணம் – கே.எல் ராகுல் வருத்தம்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியுடன் குவாலிபயர் இரண்டாவது போட்டியில் மோதும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. நேற்று பெய்த மழை காரணமாக போட்டி சிறிது தாமதமாக துவங்கினாலும் முழுவதுமாக 20 ஓவர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Mohammed Siraj De Kock

- Advertisement -

அதன்படி டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது. பெங்களூர் அணி சார்பாக இளம் வீரர் ரஜத் பட்டிதார் ஆட்டமிழக்காமல் 112 ரன்களை விளாசினார்.

அதைத் தொடர்ந்து 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 193 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாட பெங்களூர் அணி தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானாலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எலிமினேட்டர் சுற்று வரை வந்து தோற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் இந்த தோல்வி குறித்து கூறுகையில் :

Avesh Khan

இந்த போட்டியில் நாங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நாங்கள் பீல்டிங்கில் மிகப் பெரிய தவறு செய்து விட்டோம். எளிதான பல கேட்ச்களை தவறவிட்டது எங்களது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எளிய கேட்ச்களை நாம் தவற விடும்போது நமக்கு மிகப்பெரிய ஆபத்து வரும் என்பது இந்த போட்டியின் மூலம் தெரிந்துள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் பெங்களூரு அணியை சேர்ந்த பட்டிதார் மிகவும் அருமையான இன்னிங்க்ஸை விளையாடினார். எப்போதுமே ஒரு அணியின் முதல் மூன்று வீரர்களில் ஒருவர் சதம் அடிக்கும் போது நிச்சயம் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் பீல்டிங்கில் நாங்கள் மிகவும் தவறு செய்து விட்டதாக நினைக்கிறேன். நிறைய கேட்ச்களை தவறவிட்டது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக அமைந்துவிட்டது.

இதையும் படிங்க : இப்படி ஒரு சென்ச்சூரியை பார்த்ததே இல்ல. இளம்வீரரின் ஆட்டத்தினால் பரவசமடைந்த – டூபிளெஸ்ஸிஸ்

நாங்கள் ஒரு புதிய அணியாக இந்த தொடரில் பங்கேற்று நிறைய தவறுகளைச் செய்து விட்டோம். இது அனைத்து அணிகளும் நடக்கும் ஒன்றுதான். இருப்பினும் இந்த ஆண்டு அடைந்த இந்த தோல்விகளின் மூலம் சில பாடங்களைக் கற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு இன்னும் பலமாக திரும்புவோம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement