இக்கட்டான சூழ்நிலையை கடந்து நாங்கள் நல்ல நண்பர்களாக உள்ளோம் – கே.எல் ராகுல்

Rahul
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் இந்திய அணிக்காக துவக்க வீரராகவும், அவ்வப்போது 4ஆவது வீரராகவும் விளையாடி வருகிறார். வளர்ந்துவரும் இளம் வீரரான ராகுல் சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்கு உரிய கருத்தினை கூறி சர்ச்சைக்கு ஆளானார்.

Pandya 1

- Advertisement -

அந்த சர்ச்சைக்கு பிறகு நானும் பாண்டியும் இக்கட்டான சூழ்நிலையை அனுபவித்தோம். மேலும் இந்திய அணியில் இருந்து தற்காலிகமாக எங்களை நீக்கினார்கள். அப்பொழுது நான் பெங்களூரில் உள்ள பயிற்சி அகாடமியில் ராகுல் டிராவிடின் கீழ் பயிற்சி பெற்று வந்தேன். அப்போது அவர் எனக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் மனம் தளராமல் போராடுவதற்கான பல ஆலோசனைகளை தந்தார்.

மேலும் எங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவரும் அளித்த ஆதரவு மீண்டும் எங்களுக்கு வலிமையை தந்தது. அதன்பிறகு மீண்டும் இந்த சூழலில் இருந்து நானும் பாண்டியாவும் உலகக் கோப்பை அணிக்கு தேர்வானோம். அதன்பிறகு எங்கள் உடல் வலிமையும் மனவலிமையும் அதிகரித்தது. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறோம்.

rahulkl

கிரிக்கெட்டை தாண்டி எங்களுக்குள் நட்பு இன்னும் தொடர்ந்து வருகிறது. மேலும் அந்த இக்கட்டான சூழ்நிலை எங்களை தெளிவுபடுத்தி பல்வேறு விடயங்களை எங்களுக்கு கற்றுத் தந்தது இன்னும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இனிமேலும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம் எங்களது நட்பு தொடரும். ஆனால் கிரிக்கெட் மீது உள்ள புரிதல் முழுவதுமாக எங்களுக்கு அந்த கடினமான காலத்திலேயே புரிந்தது என்று ராகுல் கூறினார்.

Advertisement