ஒரு கட்டத்தில் நான் பார்மை இழந்த போது இந்த சம்பவமே என்னை நல்லா விளையாட உத்வேகம் தந்தது – ராகுல் பேட்டி

- Advertisement -

இந்திய அணியின் தற்போதைய விக்கெட் கீப்பராக இருப்பவர் கே எல் ராகுல். 2013ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான தொடர்ந்து நன்றாக விளையாடி வந்ததால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். அப்போதுதான் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து காபி வித் கரன் என்னும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவு செய்தார்.

- Advertisement -

அது பெரும் சர்ச்சை கிடையாது இருந்தாலும் பெண்கள் குறித்து பேசியதனால் அந்த விஷயத்தை பிசிசிஐ நிர்வாகக்குழு இதனை சர்ச்சை ஆக்கியது. அவர்களுக்கு ஏழு மாத தடையும் விதித்தது. இந்த காலகட்டத்தில் மனரீதியாக தன்னை வலிமையாக மாற்றி கொண்டுள்ளதாக கேஎல் ராகுல் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்…

நான் அந்த தொடரின் பாதியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தான் என்னை சிறப்பாக விளையாட வைத்துக்கொண்டிருக்கிறது. நான் சுயநலமாக விளையாட முயன்று தோற்றுப் போனேன் அதன்பின்னர் அணிக்காக விளையாட முயற்சி செய்தேன். மேலும் ,எனது லிமிட்டை தாண்டி எப்போதும் விளையாட முயற்சி செய்து வருகிறேன்.

Rahul

இந்த நிகழ்வுகள் தான் என்னை நல்ல பேட்ஸ்மேனாக மாற்றியுள்ளது. சஸ்பெண்ட் ஆன காலகட்டத்தில் எனது மனதை திடப்படுத்திக் கொண்டு வலிமையாக மாற்றினேன் என்று கூறியுள்ளார். கே எல் ராகுல் இதற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசினார்.

Rahul

மேலும், இனிமேல் கேஎல் ராகுல் உடன் சேர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்றும் விளையாட்டாக கூறியுள்ளார். இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராகுல் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.

Advertisement