சதமடித்த பின்பு என்னுடைய இந்த தனித்துவமான கொண்டாட்டத்திற்கு இதுவே காரணம் – கே.எல் ராகுல்

Rahul
- Advertisement -

கேஎல் ராகுல் ஒவ்வொரு முறை சதம் அடித்த பின்பும் தனது இரு ஆள்காட்டி விரல்களால் காதுகளை மூடி சதத்தை கொண்டாடுவார். அவரது இந்த கொண்டாட்டம் புதிதல்ல அதேபோல நேற்று முன்தினம் நடந்து முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்த பின்னர் அதே கொண்டாட்டத்தை மீண்டும் செய்தார். இந்த கொண்டாட்டத்தின் பின் இருக்கும் ரகசியத்தை பற்றி கேஎல் ராகுல் தற்போது மனம் திறந்துள்ளார்.

- Advertisement -

நேற்று முன்தினம் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவானை விரைவில் இழந்து தடுமாறியது. மட்டுமல்லாமல் அதன் பின்னர் ரோகித் சர்மாவையும் இழந்து 37 க்கு 2 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.பின்னர் விராட் கோலியுடன் ஜோடி போட்ட கேஎல் ராகுல் மிக அபாரமாக ஆடி 107 ரன்கள் அடித்தார் அதில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சதம் எடுத்த பின்னர் தனது அதே கொண்டாட்டத்தை கேஎல் ராகுல் செய்து காட்டினார்.

தனது இரு ஆள்காட்டி விரல்களால் இரு காதுகளையும் மூடிக்கொண்டு சதத்தை கொண்டாடினார்.பின்னர் முதல் இன்னிங்ஸை முடிந்தவுடன் கேஎல் ராகுல் இடம் எதற்காக அப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு , “நான் இப்படிச் செய்வதே யாரையும் புண்படுத்தும் வகையில் கண்டிப்பாக கிடையாது , வெளியே நெகட்டிவாக நிறைய பேசுபவர்களுக்கும் மற்றும் நம்மை குறைத்து இடை போடும் நபர்களுக்குமே இந்த செய்கை என்று விளக்கம் அளித்தார்.

rahul 1

தரம் தாழ்ந்து மற்றும் நம்மை குறைத்து பேசுபவர்களின் வார்த்தைகளை நாம் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது அதை தான் நான் ஒவ்வொரு கொண்டாட்டத்தின் போதும் செய்வேன் என்று விளக்கம் அளித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மிக அதிக அளவில் சொதப்பிய கே எல் ராகுல் அனைத்து கேள்விகளுக்கும் ஆளானார். ஆனால் அதையெல்லாம் தூரம் தள்ளி விட்டு நடந்து முடிந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக பங்களித்திருக்கிறார்.

rahul 2

முதல் போட்டியில் 43 பந்துகளில் 62 ரன்கள் அடித்து இந்தியாவை 300க்கு மேல் கொண்டு செல்லவும், இரண்டாவது போட்டியிலும் 108 ரன்கள் அடித்து மேலும் இந்தியாவை 300 ரன்களுக்கு மேல் கொண்டு செல்ல உதவி இருக்கிறார். இதன் மூலம் அனைவரது பாராட்டுகளையும் கேஎல் ராகுல் பெற்று வருகிறார்.

Advertisement