KL Rahul : கோலி, டிவில்லியர்ஸ் நிழலில் நான் இருந்தாலும். உங்களோடு விளையாடும்போது சிறப்பாக ஆடுகிறேன் – ராகுல் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமை

Rahul kl
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டுபிளிஸ்சிஸ் 96 ரன்களும், ரெய்னா 53 ரன்களும் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

அதன்படி தெடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்டமாக ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களையும், பூரான் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகன் விருதினை ராகுல் பெற்றார்.

Rahul

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ராகுல் கூறியதாவது : நான் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது நான் சிறந்த ஆட்டக்காரராக மாறினேன். கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் எனக்கு தேவையான ஆதரவினையும், அறிவுரையும் கூறி எனது ஆட்டத்தை மாற்றினார்கள். அப்போது நான் பெங்களூரு அணியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் நிழலில் இருந்தேன். ஆனால், தற்போது பஞ்சாப் அணிக்காக முக்கியமான வீரராக இருக்கிறேன்.

Ragul

மேலும், பஞ்சாப் அணி என்னை துவக்கவீரராக களமிறங்கியதும் அதுவும் கெயிலுடன் என்னை களமிறக்கியதும் எனது நம்பிக்கை மற்றும் ஆட்டத்திறனை மேலும் அதிகரித்தது. கெயிலுடன் ஆடும்போது எனக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும். அவரின் அதிரடி எனது ஆட்டத்தை எளிமையாக்கும் அதனால் நான் விளையாடியதில் என்னுடன் விளையாடிய துவக்க வீரர்களில் எனக்கு கெயிலை மிகவும் பிடிக்கும். அவரே எனது சிறந்த பாட்னர் தொடர்ந்து அவருடன் களமிறங்கி பஞ்சாப் அணிக்காக விளையாடி வெற்றிகளை பெற்றுத்தர விரும்புகிறேன் என்று ராகுல் கூறினார்.

Advertisement