கிறிஸ் கெயில் தனது நாட்டிற்கு ஆடுவதை விட, உலகம் முழுவதும் நடைபெறும் டி20 கிரிக்கெட்டில் தொடர்களில் ஆடுவதை விரும்புவார். இதன் காரணமாக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடிவருகிறார்.ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.
முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இளம் வீரரான கேஎல் ராகுல் செயல்பட்டு வருகிறார். ஆனால் தற்போது வரை இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெயில் களமிறங்கவில்லை. முதல் ஆட்டத்தில் செல்டன் காட்ரோல், கிரிஸ் ஜோர்டன், மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரன் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இந்த அணிக்காக களம் இறங்கினார்கள்.
இதனால் கிறிஸ் கெயிலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இரண்டாவது ஆட்டத்தில் கிரிஸ் ஜோர்டன் பதிலாக ஜேம்ஸ் நீசம் விளையாடினார். இப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் அதிரடியில் அசத்தும் கெயிலுக்கு இடம் கிடைக்கவில்லை. ஐ.பி.எல் தொடர் என்றாலே கெயிலின் ராட்சச சிக்ஸர்களை காண ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது மறுக்கமுடியாத உண்மை.
இந்நிலையில் தற்போது இந்த தொடரில் இதுவரை கெயிலை இறக்காதது குறித்து கேஎல் ராகுல் கூறுகையில்,
“கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிரடி ஆட்டக்காரர். இப்படி ஒரு வீரரை அணியில் எடுக்காமல் இருப்பது எங்களுக்கு கடினமான முடிவு. கண்டிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் அவர் நன்றாக விளையாடுவார் இந்த வாய்ப்புகாக காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார் கே எல் ராகுல்.