இவரது ஆலோசனைகள் மட்டும் போதும். நான் ஈஸியா கேப்டன்சி பண்ணிடுவேன் – ராகுல் பெருமிதம்

rahul

ஐபிஎல் தொடரில் கடந்த பல வருடங்களாக நன்றாக விளையாடி கோப்பையை வெல்ல முடியாத ஒரு அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. வருடா வருடம் பல வீரர்களை மாற்றியும், இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கேப்டனை மாற்றியும் பல முயற்சிகளை செய்து வருகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

kxip

அப்படியிருந்தும் அந்த அணியால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்படித்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த அணியின் கேப்டனாக மாற்றப்பட்டார். அவர் தலைமையிலும் ஓரளவிற்குத் தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி செயல்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் பயிற்சியாளர், அணியின் கேப்டன், வீரர்கள் குழு என பலவற்றை மாற்றியுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக அணில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார் .மேலும் கேப்டனாக அதிரடி வீரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் கூறுகையில்…

அனில் கும்ப்ளேவை போன்ற ஒரு ஜாம்பவான் அருகில் இருந்து எனக்கு உதவும் போது இந்த ஐபிஎல் தொடர் மிகச்சிறந்த தொடராக என்று இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவருடன் கிரிக்கெட் ஆடுகளத்திற்கு உள்ளேயும் அதற்கு வெளியேயும் நட்பு வைத்திருக்கிறேன்.

- Advertisement -

Rahul

அனில் கும்ளே எனது கேப்டன் வேலையை மிகவும் எளிதாக்கி விடுவார் என்று நம்புகிறேன். பெரும்பாலான திட்டங்களை அவர் வகுத்து விடுவார். நான் மைதானத்திற்கு சென்று அவர் கூறிய திட்டங்களை செயல்படுத்தி விட்டால் மட்டும் போதும் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் கே எல் ராகுல்.