IND vs BAN : நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு இதையும் யூஸ் பண்ணலனா – கே.எல் ராகுல் காலி தான்

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த வேளையில் தற்போது அடுத்ததாக இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்ற முனைப்பு காட்டுகிறது.

IND-vs-BAN

- Advertisement -

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கொன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய பங்களாதேஷ் அணியும் போராட்டத்தை நடத்தி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது போட்டி ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 22-ஆம் தேதி துவங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக உமேஷ் யாதவ் மற்றும் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ஆகியோர் நான்கு விக்கெட்டுகளையும், ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

KL Rahul 1

அதனை தொடர்ந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை குவித்து களத்தில் உள்ளது. துவக்க வீரரான ராகுல் 3 ரன்களிலும், சுப்மன் கில் 14 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாகவே பேட்டிங்கில் சொதப்பி வரும் கே.எல் ராகுலுக்கு இந்த போட்டி தனது பார்மை மீட்டெடுக்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சமீக காலமாகவே அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி வரும் கே.எல் ராகுல் இந்த போட்டியில் இன்னும் நான்கு நாட்கள் எஞ்சியிருப்பதாலும் இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்லும் என்பதாலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கே.எல் ராகுல் ஒரு பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும்.

இதையும் படிங்க : எல்லாம் ரமீஸ் ராஜாவின் வாய் மிரட்டல் தான், 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் சரணடையும் பாகிஸ்தான் – விவரம் இதோ

இல்லையெனில் அவரை தொடர்ந்து வாய்ப்புக்காக வரும் வரிசை கட்டி நிற்கும் இளம் வீரர்கள் அவரது இடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வாய்ப்பினை கே.எல் ராகுல் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement