எல்லாம் ரமீஸ் ராஜாவின் வாய் மிரட்டல் தான், 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் சரணடையும் பாகிஸ்தான் – விவரம் இதோ

Ramiz Raja IND vs Pak
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளை பார்க்க வருட கணக்கில் ரசிகர்கள் காத்து கிடக்கும் நிலையில் இந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இந்தியா – பாகிஸ்தான் மோதின.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

அந்த வரிசையில் இந்த வருடம் மொத்தம் 3 போட்டிகளில் மோதியை இவ்விரு அணிகளும் அடுத்ததாக 2023ஆம் ஆண்டு மீண்டும் ஆசிய மற்றும் உலக கோப்பையில் மோதுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டுக்கு பயணித்து அத்தொடரில் இந்தியா பங்கேற்காது என்று பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

எல்லாம் வாய் உருட்டு:
ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு நீங்கள் வரவில்லை என்றால் அதே 2023இல் உங்கள் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று பதிலடி கொடுத்தது. அதை உறுதிப்படுத்திய அந்நாட்டு வாரிய தலைவர் ரமீஷ் ராஜா தங்களது அணி பங்கேற்காத 2023 உலக கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று விமர்சித்தார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் ஐசிசி தலைமை நிர்வாக இயக்குனர் ஜெப் ஆலர்டைஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

VIrat Kohli IND vs PAK

அதில் 2023 உலக கோப்பையில் பங்கேற்க இந்தியாவுக்கு தங்களது அணியை அனுப்ப முடியாது என்பதை ஐசிசி நிர்வாகிகளிடம் பாகிஸ்தான் வாரியம் சார்பில் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்காக பதிலடி கொடுப்பதற்காக மட்டுமே ரமீஷ் ராஜா அவ்வாறு பேசியதாக தெரிவிக்கும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் நிர்வாக அதிகாரி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உலகக்கோப்பை நடைபெறும் இந்தியாவுக்கு தங்களது அணியை அனுப்பாதது பற்றி பாகிஸ்தான் வாரியம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரை புறக்கணிப்பதற்கு ஆதரவாக நாங்கள் இல்லை என்று ஐசிசி அதிகாரிகளுக்கு ரமீஷ் ராஜா உறுதியளித்தார். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகள் மோசமாக இருப்பதால் பாகிஸ்தான் வாரியம் அவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது தான் ஆசிய கோப்பைக்கு இந்திய அணியை அனுப்புமாறு அழுத்தம் கொடுத்ததாக அமையும்”

Ramiz Raja

“குறிப்பாக உலக கோப்பைக்காக இந்தியா ஏற்கனவே நிறைய முதலீடுகள் செய்துள்ள இந்த சமயத்தில் அழுத்தம் கொடுத்தாக வேண்டும் என்பதில் ரமீஸ் தெளிவாக இருந்தார். அதே சமயம் அடுத்த சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான உரிமையை இந்தியா அடங்கிய உறுப்பு நாடுகளின் அனுமதியுடன் பாகிஸ்தான் பெற்றுள்ளதையும் ஐசிசியிடம் அவர் நினைவு படுத்தினார். அப்போது தான் அந்தத் தொடரில் இது போன்ற கடைசி நேர சலசலப்புகள் இருக்காது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சாம் கரண், ஸ்டோக்ஸ் விடுங்க – ஐபிஎல் ஏலத்தில் அவங்க தான் பெரிய விலைக்கு போவாங்க, ரெய்னாவின் 3 வீரர்கள் இதோ

இதிலிருந்து ஆசிய கோப்பை சம்பந்தமாக ரமீஷ் ராஜா மற்றும் பாகிஸ்தான் வாரியம் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் வெறும் வாய் வார்த்தைகள் என்பது தெரிய வருகிறது. முன்னதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பங்கு போடும் நிலையில் இந்தியா மட்டும் அதற்கு நிதியுதவி அளிக்கும் நாடாக உள்ளது. அதே போல் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையை புறக்கணித்தால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணம் பாகிஸ்தானுக்கு கிடைக்காது. அதன் காரணமாகவே 2023 ஆசிய கோப்பை விவாகரத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைய துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement