IPL 2023 : அந்த குழந்தையோட அட்ரஸ் அனுப்புங்க, நெஞ்சை தொட்ட சிறுவனை வித்யாசமாக பாராட்டிய கேஎல் ராகுல் – நடந்தது என்ன

KL rahul Kid
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த நட்சத்திரம் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் தற்போது காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாற்றமாக செயல்பட்ட அவர் 2018 வாக்கில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய 2019இல் காயமடைந்து வெளியேறிய சிகர் தவானை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். அதனால் அவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடியாக உச்சத்தை தொட்ட நிலையில் இளம் வீரராக இருப்பதால் பிசிசிஐ அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்க நினைத்தது.

ஆனால் நாளடைவில் அவை அனைத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடி குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டான அவர் அணியின் நலனுக்காக விளையாடுவதில்லை என ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர். அந்த நிலையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் எழுந்த விமர்சனங்களை தாங்க முடியாத பிசிசிஐ துணை கேப்டன்ஷிப் மற்றும் ஓப்பனிங் இடத்தை பறித்து மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் வாய்ப்பை கொடுத்துள்ளது.

- Advertisement -

நெஞ்சை தொட்ட சிறுவன்:
அப்படி இழந்த தன்னுடைய ஃபார்மையும் இடத்தையும் மீட்டெடுக்க ஐபிஎல் 2023 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அவர் கொஞ்சம் கூட மாறாமல் அதே போல செயல்பட்டு பின்னடைவை ஏற்படுத்தி வந்தார். அதிலும் குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் கையிலிருந்த வெற்றியை மெதுவாகவே விளையாடி கடைசி ஓவரில் அவுட்டாகி எதிரணிக்கு தாரை வார்த்த அவர் உச்சகட்ட கிண்டல்களை சந்தித்து காயத்தால் வெளியேறினார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 கேப்டன்களின் பெயரை சரியாக சொல்லுமாறு ஒரு தந்தை தன்னுடைய சிறிய குழந்தையிடம் கேட்டுக் கொள்கிறார். அதற்கு டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஐபிஎல் போஸ்டரில் டேவிட் வார்னர், ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா, தோனி, ரோஹித் சர்மா, நிதிஷ் ராணா, டு பிளேஸிஸ், மார்க்ரம் என 10 கேப்டன்களின் பெயர்களையும் யோசித்து யோசித்து அந்த குழந்தை அழகாக கச்சிதமாக படித்த போது அவருடைய தந்தை கைதட்டி பாராட்டி அதில் “யாரை உனக்கு பிடிக்கும்” என்று கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அதற்கு எடுத்த எடுப்பிலேயே கண்மூடித்தனமாக சொல்லாத அந்த குழந்தை சிறுவன் “நான் சற்று யோசிக்க வேண்டும்” என்று தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து மீண்டும் அவருடைய தந்தை கேள்வி எழுப்பிய போது “கேஎல் ராகுல்” தான் தமக்கு மிகவும் பிடித்த வீரர் என்று அந்த சிறுவன் பதிலளித்தார். அதற்கும் கைதட்டி பாராட்டிய அவருடைய தந்தை அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் கேஎல் ராகுல் மீதான தன்னுடைய குழந்தையின் அன்பை காட்டுவதற்காக டேக் செய்து பகிர்ந்திருந்தார்.

அதை லண்டனில் காயத்திலிருந்து குணமடைந்து வரும் கேஎல் ராகுல் பார்த்து மிகவும் நெகிழ்ச்சியடைந்து “சோ ஸ்வீட். உங்களுடைய வீட்டு முகவரியை என்னுடைய இன்பாக்ஸில் அனுப்புங்கள். நான் அந்த குழந்தைக்கு என்னுடைய கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக அனுப்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார். குறிப்பாக தமது நெஞ்சைத் தொடும் வகையில் மழலையாக பேசி தன்னைப் பிடித்த வீரர் என்று அன்பை வெளிப்படுத்திய அந்த சிறுவனுக்கு நேரடியாக கையொப்பமிட்ட ஜெர்சியை அனுப்புகிறேன் அட்ரஸ் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளது ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:CSK vs GT : வரலாற்றில் முதல் முறை – மழையால் ரிசர்வ் டே சென்ற ஐபிஎல் 2023 ஃபைனல், மீண்டும் மழை பெய்தால் கோப்பை யாருக்கு?

அப்படி என்ன தான் சமீப காலங்களில் தடுமாறினாலும் குழந்தையின் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு க்ளாஸ் நிறைந்த வீரரான ராகுல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அக்கறையிலேயே அனைவரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement