யார் செலக்ட்டான என்ன? விராட் கோலியின் இடத்தில் ஆடப்போவது அவர்தான் – அது கன்பார்ம் ஆயிடுச்சி

Virat
- Advertisement -

ஹைதராபாத் நகரில் இன்னும் இரு தினங்களில் ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி துவங்க உள்ளது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது.

அப்படி அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி சொந்த காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டியில் இருந்து விலகி உள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

இதன் காரணமாக விராட் கோலிக்கு பதிலாக தேர்வாகப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஒருபுறம் விராட் கோலிக்கு பதிலாக யார்? இந்திய அணியில் தேர்வாகப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அவரது இடத்தில் பிளேயிங் லெவனில் விளையாடப்போகும் வீரர் யார்? என்ற கேள்வியும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக கே.எல் ராகுல் தான் விராட் கோலியின் இடத்தில் பேட்டிங் வரிசையில் களமிறங்கி விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் விராட் கோலி போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த வீரரின் இடத்தை நிரப்ப அதே அளவிற்கு அனுபவம் வாய்ந்த வீரர் அவசியம்.

- Advertisement -

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுலே நான்காவது இடத்தில் விளையாட வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி கே.எல் ராகுல் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க 2 வீரர்களுக்கு இடையே கடும்போட்டி – விவரம் இதோ

இவ்வேளையில் கே.எல் ராகுல் நான்காவது இடத்திலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எஸ் பரத்தும் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரர் அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் அவரிடத்தில் கே.எல் ராகுல் தான் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement