விராட் கோலிக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க 2 வீரர்களுக்கு இடையே கடும்போட்டி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து வெளியேறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். மேலும் இதுகுறித்து அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடவும், அணியின் நிர்வாகத்திடமும் தெரிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் சொந்த காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார் என்ற அறிக்கையை வெளியிட்டது.

அதனை தொடர்ந்து விராட் கோலியின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதேபோன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் விராட் கோலிக்கு பதிலாக மாற்றுவீரரை விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே அறிவிக்கப்பட்ட வேளையில் அதிலிருந்து விராட் கோலி வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவு என்றே கூறலாம்.

ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கி அணிக்கு வலிமை சேர்க்கும் விராட் கோலி போன்ற அனுபவ வீரர் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு தான். இருப்பினும் அந்த ஒரு இடத்திற்காக தேர்வாகப்போகும் வீரர் யார்? என்ற தேடல் அதிகரித்துள்ளது. ஏனெனில் இப்படி விராட் கோலிக்கு பதிலாக இடம் பெறப்போகும் அந்த வீரர் வருங்காலத்தில் டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதன் காரணமாகவே அந்த தேர்வில் ஜெயிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் அந்த இடத்தினை பிடிக்க தற்போது இரண்டு வீரர்களுக்கு இடையே கடுமையான போட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மத்திய பிரதேச அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வரும் ரஜத் பட்டிதார் மற்றும் மும்பை அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்ஃபாஸ்கான் ஆகிய இருவருமே அந்த போட்டியில் உள்ளனர்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு வார்னிங் குடுத்த இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்த – இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா

இந்த இரண்டு வீரர்களுமே டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ரன்களை மலைபோல் குவித்து இந்திய அணியின் வாய்ப்பிற்காக காத்திருப்பதால் இந்த இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement