இந்திய அணிக்கு வார்னிங் குடுத்த இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்த – இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வட்டத்திற்குள் இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்த தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்காத வேளையில் இம்முறையும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அந்த வெற்றிநடையை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதே வேளையில் மற்றொருபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களை இந்திய அணி எவ்வாறு கையாளப்போகிறது? என்பது குறித்த ஆவலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் டி20 போன்று அதிரடியாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தி காட்டுவோம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களும், இந்நாள் வீரர்களும் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த எச்சரிக்கைகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணியின் அதிரடியான அணுகுமுறை அவர்களுக்கு நல்ல பலனை அளித்து வருகிறது.

- Advertisement -

அவர்கள் வெற்றிகரமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். இருப்பினும் அவர்களது ஆக்ரோஷமான இந்த பாணியை பயன்படுத்தியே நான் விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் வேகமாக விளையாடும் போது என்னுடைய பந்துவீச்சில் ஆட்டம் இழக்க வாய்ப்பு உண்டு. அதனால் இந்த தொடரில் நான் நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றுவேன் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இந்திய அணியின் ஜாம்பவான் ரவி சாஸ்திரிக்கு பி.சி.சி.ஐ வழங்கவுள்ள மிகப்பெரிய விருது – அதுவும் இன்னைக்கே..

அவர்களுடைய சாதகமான அம்சங்களையே எப்படி எங்களுக்கு சாதகமாக்கி பயன்படுத்துவது என்பது குறித்து நான் யோசித்து வருகிறேன். அந்த வகையில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடினாலும் இந்த தொடரில் ஒரு பவுலராக என்னால் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என பும்ரா பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement