இந்திய அணியின் ஜாம்பவான் ரவி சாஸ்திரிக்கு பி.சி.சி.ஐ வழங்கவுள்ள மிகப்பெரிய விருது – அதுவும் இன்னைக்கே..

Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கடந்த 2019-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் இந்திய வீரர்களுக்கு விருது வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பிற்கு பிறகு தற்போது நான்கு ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜனவரி 23-ஆம் தேதியான இன்று ஹைதராபாத்தில் பிசிசிஐ சிறந்த இந்திய வீரர், வீராங்கனை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்க உள்ளது.

- Advertisement -

இந்த விழாவில் இந்திய அணியின் வீரர்களும், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி வீரர்களும், விருதினை வழங்க இருக்கும் முக்கிய நபர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய இந்த விழாவில் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவி சாஸ்திரி 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 15 சதங்கள் உட்பட 6938 ரன்களை குவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் 280 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

1983-ஆம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றபோதும், 1985-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போதும் இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்த ரவி சாஸ்திரி அதோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க : நாங்களும் அதை தான் எதிர்பாக்குறோம்.. உங்க ரூட்லயே நீங்க விழப்போறீங்க.. இங்கிலாந்தின் எச்சரிக்கைக்கு பும்ரா பதிலடி

அதுமட்டுமின்றி இரண்டு முறை இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இப்படி தொடர்ச்சியாக கிரிக்கெட் உடனே பயணிக்கும் இவருக்கு பி.சி.சி.ஐ வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கவுள்ளது. அதேபோன்று கடந்த 2023-ஆம் ஆண்டு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில்லுக்கு கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement