நாங்களும் அதை தான் எதிர்பாக்குறோம்.. உங்க ரூட்லயே நீங்க விழப்போறீங்க.. இங்கிலாந்தின் எச்சரிக்கைக்கு பும்ரா பதிலடி

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் நகரில் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. அதில் சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஏனெனில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. ஆனால் அதெல்லாம் பழைய கதை இப்போது நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடுகிறோம் என்பதால் இந்தியாவை வீழ்த்தி சாதித்து காட்டுவோம் என்று இங்கிலாந்து அணியினர் எச்சரிக்கை எடுத்து வருகின்றனர்.

- Advertisement -

பும்ரா பதிலடி:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வேகமாக ரன்கள் குவிக்கும் முனைப்புடன் பேட்டிங் செய்வதை தாங்களும் எதிர்பார்ப்பதாக ஜஸ்பிரித் பும்ரா பதிலடி கொடுத்துள்ளார். ஏனெனில் வேகமாக ரன்கள் எடுக்க முயற்சிக்கும் போது வழக்கத்தை விட தம்மை போன்ற பவுலர்களும் வேகமாக அதிக விக்கெட்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி கார்டியன் பத்திரிக்கையில் பேசியது பின்வருமாறு.

“பஸ்பால் என்ற சொல்லுடன் உண்மையில் எனக்கு தொடர்பில்லை. ஆனால் அவர்கள் வெற்றிகரமான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆக்ரோஷமான பாதையில் விளையாட மற்றொரு வழி இருக்கிறது என்பதை அவர்கள் இந்த உலகிற்கு காண்பிக்கின்றனர். அதே சமயம் ஒரு பவுலராக அது என்னை தொடர்ந்து விளையாட வைக்கும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“அதாவது அவர்கள் வேகமாக விளையாடும் போது என்னிடம் அவுட்டாக சோர்வடைய மாட்டார்கள். அதனால் எனக்கு நிறைய விக்கெட்டுகள் கிடைக்கும். அந்த வகையில் இது போன்ற அம்சங்களை எப்படி எனக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பதை பற்றி நான் எப்போதும் நினைப்பேன். இருப்பினும் இப்படி அதிரடியாக விளையாடுவதற்கான பாராட்டுக்கள் இங்கிலாந்தை சேரும்”

இதையும் படிங்க: விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக என்ன காரணம்? – இது உண்மையா இருந்தா நல்லா இருக்கும்

“ஆனால் ஒரு பவுலராக அது போன்ற போட்டியில் நீங்கள் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள்” என்று கூறினார். அந்த வகையில் இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்களுக்கு நிகராக முகமது சிராஜ், பும்ரா ஆகிய தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் இங்கிலாந்துக்கு சவாலை கொடுப்பார்கள் என்று நம்பலாம். அதனால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement