விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக என்ன காரணம்? – இது உண்மையா இருந்தா நல்லா இருக்கும்

Kohli
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதற்கு அடுத்ததாக இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியை மட்டுமே பிசிசிஐ அறிவித்திருந்தனர்.

இவ்வேளையில் அந்த அணியில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் விராட் கோலி குறித்த தகவலை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ : விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். எனவே அவரது இந்த விலகல் குறித்து யாரும் பெரிய அளவில் ஆராய வேண்டாம் என்று தெரிவித்திருந்தது.

- Advertisement -

ஆனாலும் விராட் கோலியின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன? என்ற தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் விராட் கோலி மிகச் சிறப்பான ஃபார்மில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் இப்படி திடீரென அணியிலிருந்து கடைசி நேரத்தில் விலக என்ன காரணம்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கு பதிலாக ஒரு விடயம் தற்போது அனைவரது மத்தியிலும் சமூகவலைதளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. அதாவது அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக பிரசவத்திற்காக காத்திருக்கிறார் என்றும் இன்னும் ஓரிரு வாரங்களில் அனுஸ்கா சர்மாவுக்கு பிரசவம் நடைபெறலாம் என்றும் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஏனெனில் அனுஷ்கா சர்மா குழந்தை உண்டாகி இருப்பதால்தான் சமீப காலமாகவே எவ்வித நிகழ்ச்சியும் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு சமீபத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் அனுஷ்கா சர்மா சற்று உடல் பருமனை மறைக்கும் அளவிற்கு உடை அணிந்த படியும், அவரது உடல் பருமனாகவும் காணப்பட்டது.

இதையும் படிங்க : அது ஒன்னும் ராக்கெட் சைன்ஸ் இல்ல.. இந்தியாவை வீழ்த்தும் திட்டம் பற்றி மெக்கல்லம் பேட்டி

இருப்பதால் நிச்சயம் விராட் கோலி தனது அடுத்த இரண்டாவது குழந்தைக்காகவே மனைவியுடன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் கோலி அடுத்து மீண்டும் தந்தையானால் அது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாகவே மாறும். கடந்த 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் தங்களது திருமணத்தை முடித்த இந்த ஜோடிக்கு ஏற்கனவே 2021-ஆம் ஆண்டு வாமிகா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement