அது ஒன்னும் ராக்கெட் சைன்ஸ் இல்ல.. இந்தியாவை வீழ்த்தும் திட்டம் பற்றி மெக்கல்லம் பேட்டி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது. இந்த தொடரில் வலுவான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தை தோற்கடிக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு தொடரில் கூட தோற்றதில்லை.

ஆனால் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல இங்கிலாந்து விளையாடுகிறது. அந்த அணுகுமுறையை பயன்படுத்தி தொடர் வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்து இம்முறை 12 வருடங்கள் கழித்து இந்தியாவை அவர்களின் சொந்த ஊரில் வீழ்த்தும் லட்சியத்துடன் களமிறங்குகிறது.

- Advertisement -

ராக்கெட் சைன்ஸ் இல்ல:
இந்நிலையில் இந்தியாவில் தங்களுடைய புதிய அதிரடி அணுகுமுறை சோதிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ப்ரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சோதனைக்கு தான் நாங்களும் காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இந்தியாவில் வெல்ல ஒரு போட்டியில் 20 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற ராக்கெட் அறிவியலை விட எளிதான திட்டத்தை பின்பற்றி தாங்கள் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி பிபிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் எங்களுடைய அணுகுமுறை சோதிக்கப்படும். அதைத்தான் நான் இந்த தொடரில் மிகவும் எதிர்பார்த்து விரும்புகிறேன். எங்களுடைய வழிமுறைகள் இத்தொடரில் சவாலை சந்திக்கும். அதில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை பார்க்க உள்ளேன். இது ஆர்வம் மிகுந்த வாய்ப்பாகும்”

- Advertisement -

“இறுதியில் நீங்கள் எங்களுடைய மனதில் உள்ள தரமான வீரர்களை வைத்து நிகழ்காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். அவர்கள் களத்திற்கு செல்லும் போது 10 அடி உயரம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் விளையாடுவார்கள். அது அவர்களுடைய திறமை வெளிவருவதற்கு உதவும். அதை வைத்து அவர்கள் களத்தில் முக்கியமான நேரத்தில் வேகமாக செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க: பிக்பேஷ் 2024 : 10 ஃபோர்ஸ் 12 சிக்ஸ்.. கெயிலின் மாஸ் சாதனையை நொறுக்கி வெறியாட்டம் போட்ட ஆஸி வீரர்

“ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் பந்து வீச்சில் 20 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அத்துடன் இந்தியாவை விட நாங்கள் பேட்டிங்கில் ஒரு ரன் எக்ஸ்ட்ராவாக எடுக்க வேண்டும். இந்த திட்டங்கள் ராக்கெட் அறிவியல் கிடையாது. ஆனால் அதை எப்போது பின்பற்ற வேண்டும் எப்போது மாற்ற வேண்டும் என்பது தான் ஆர்வத்தை ஏற்படுத்த போகும் முக்கிய பங்காக்கும்” என்று கூறினார். அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் 2 போட்டியில் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement