வெறும் 1 இன்னிங்ஸ் நல்லா விளையாடிய இஷானுக்காக பழசை மறந்து அவர ட்ராப் பண்ணிடாதீங்க – இர்பான் பதான் எச்சரிக்கை

Irfan Pathan
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் சுற்றின் முடிவில் 3 புள்ளிகளை பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் தகுதி பெற்றுள்ளது. முன்னதாக 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் லேசான காயத்தை சந்தித்ததால் முதலிரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்ட அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் பொதுவாகவே துவக்க வீரராக விளையாடக் கூடியவர் என்பதால் மிடில் ஆர்டரில் அசத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு எதிராக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 66/4 என இந்தியா தடுமாறிய போது மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 82 (81) ரன்கள் அடித்து அசத்தினார். குறிப்பாக ஆடரிலும் தம்மால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த அவர் 267 ரன்கள் எடுப்பதற்கு உதவி இந்தியாவின் மானத்தையும் ஓரளவு காப்பாற்றினார்.

- Advertisement -

பழச மறக்காதீங்க:
இருப்பினும் அப்போது கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் சூப்பர் 4 சுற்றில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் ஏற்கனவே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சுமாரான ஃபார்மில் இருந்த ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பதால் பேசாமல் பெஞ்சிலேயே அமரட்டும் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நீண்ட காலமாக அசத்தி வரும் ராகுலை வெறும் ஒரு போட்டியில் மட்டும் அசத்திய இஷானுக்காக பழையவற்றை மறந்து நீக்கம்கூடாது என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த இருவரும் விளையாடும் 11 பேர் அணியில் ஒன்றாக இருக்க முடியாது. இந்த சமயத்தில் நடந்து வரும் விவாதத்தில் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் பாகிஸ்தானுக்கு எதிராக இசான் கிசான் தாம் எப்போதுமே விளையாடாத 5வது இடத்தில் ரன்கள் அடித்தார்”

- Advertisement -

“ஒருவேளை கடவுள் தீர்ப்பால் அடுத்த போட்டியில் அவர் அவுட்டானால் ஃபார்மை இழந்து விட்டார் என்று நாம் சொல்வோமா? நிச்சயம் கிடையாது. அதை நாம் சீக்கிரம் மறந்து விடுவோம். ஆனால் கடந்த 2 வருடமாக சிறப்பாக செயல்பட்ட ராகுலின் செயல்பாடுகளை வெறும் ஒரு போட்டியில் அசத்திய இசான் கிசனுக்காக மறந்து விடக்கூடாது. நீங்கள் இந்த குறுகிய கால மறதியை கைவிட வேண்டும்”

இதையும் படிங்க: வீடியோ : கண்ணுல கூட தெரியல. மின்னல் வேகத்தில் ஸ்டம்பை தகர்த்த பந்து – ஹாரிஸ் ரவுப் அசத்தல் பவுலிங்

“அதனால் என்னைப்போல நீண்ட கால இலக்கை மனதில் வைத்து ஒருவருக்கு தேவையான வாய்ப்பை கொடுத்தால் தான் நிலையான அணியை உருவாக்க முடியும். எனவே ராகுல் காயத்திலிருந்து வந்து சிறப்பாக செயல்படாமல் போனால் ஃபார்மை இழந்து விட்டார் என்றும் அதன் இசானுக்கு உலக கோப்பையில் முழுவதுமாக வாய்ப்பு கொடுக்கலாம் என்று சொல்லாதீர்கள். ஏனெனில் கேஎல் ராகுல் அணிக்குள் வரும் போது நிச்சயமாக விளையாடுவார்” என்று கூறினார்.

Advertisement