கண்ணுல கூட தெரியல. மின்னல் வேகத்தில் ஸ்டம்பை தகர்த்த பந்து – ஹாரிஸ் ரவுப் அசத்தல் பவுலிங்

Haris-Rauf
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியானது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே லாகூரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணியானது பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்களை மட்டுமே குவித்து சுருண்டது.

பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்களையும், ஷாகிப் அல் ஹசன் 53 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவுப் 6 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஹாரிஸ் ரவுப் வீசிய பந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பங்களாதேஷ் அணியின் வீரரை வீழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒன்பது பந்துகளை சந்தித்து இருந்த ஹிரிடாய் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்திருந்த வேளையில் ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement