பல மாதங்கள் கடந்தும் இந்த தோல்வி என் மனதை நொறுக்குகிறது. நான் தூக்கமில்லாமல் தவிக்கிறேன் – வருத்தமுடன் பேசிய ராகுல்

Rahul
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐ.பி.எல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் பல மாதங்களாக தொடர்ந்து விளையாடிவந்த வீரர்கள் தற்போது இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்க படுவதால் அவர்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுப்பது மட்டுமின்றி அனைவரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடனும், சக வீரர்களுடனும் பேசி வருகின்றனர். இந்நிலையில் கேஎல் ராகுல் தனியார் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

Rahul

- Advertisement -

நானும் எனது குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறேன். பாதுகாப்பாக இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறோம். வீட்டில் நேரம் செலவழிப்பது நன்றாக இருக்கிறது. கிரிக்கெட்டில் இருக்கும்போது எப்படியாவது தனியாக இருக்க முடியுமா என்று எதிர்பார்ப்போம். ஆனால் இப்போது அனைவருமே தனியாகத்தான் இருக்கிறோம்.

இந்த காலகட்டத்தில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் எங்கள் மனம் நொறுங்கிப் போனது. ஏதாவது ஒரு போட்டியை மாற்றிவிட முடியும் என்ற அளவிற்கு சக்தி கிடைத்தால், கண்டிப்பாக இந்த அரையிறுதிப் போட்டியைத்தான் மாற்ற நினைப்பேன்.

Rahul

அந்த தோல்வியிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. சில வேளைகளில் அந்த தோல்வி எங்களை பயமுறுத்தும். பல வேளைகளில் அந்த தோல்வி குறித்த துரதிஷ்டவசமான கனவுதான் எங்களை தட்டி எழுப்பும்.தற்போது வரை அந்தத் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. அந்த தோல்வி எங்கள் அனைவரையும் மனதளவில் மிகவும் காயப்படுத்தியது.

- Advertisement -

சமூக ஊடகங்களில் தனிந்பர் தாக்குதல் இருக்ககூடாது. ஒருவரின் குடும்பத்தை காயப்படுத்தி பேசக்கூடாது. மக்கள் விரைவில் இது போன்ற விஷயங்களை கற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் கே.எல் ராகுல். உலகக்கோப்பை தொடரிலும் சரி அதன்பிறகும் சரி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.

rahul 3

மேலும் தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டி என இரண்டு வகை கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் அவரே துவக்க வீரராக களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement