IND vs RSA : பிட்ச் பேட்டிங்குக்கு கஷ்டமா இருந்தாலும், அவரு மட்டும் பொளக்குறாருங்க – கே.எல் ராகுல் பாராட்டு

Rahul
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்களை மட்டுமே குவித்தது.

KL Rahul Suryakumar Yadav IND vs RSA

- Advertisement -

அதனை தொடர்ந்து 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. இப்படி 17 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்ததால் இந்த சரிவிலிருந்து எவ்வாறு மீளப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சூரியகுமார் யாதவ் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு சேர்த்து 16.4 ஓவர்களில் 110 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்றுத்தந்தனர்.

இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய கே.எல் ராகுல் 56 பந்துகளில் 51 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் பொறுமையாக விளையாடினாலும் முக்கியமான அரைசதத்தை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ராகுல் போட்டி முடிந்து பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது :

Suryakumar Yadav vs RSA

நிச்சயம் இந்த திருவனந்தபுரம் மைதானம் பேட்டிங் செய்ய சற்று கடினமாகவே இருந்தது. இதுபோன்று சவாலான ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது என்பது சிறப்பான ஒன்றுதான். அந்த வகையில் இன்று நான் சற்று ரன்களை குவித்துள்ளதில் மகிழ்ச்சி. அதே வேளையில் சூரியகுமார் யாதவ் வந்து விளையாடிய விதம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவர் பந்தை மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பறக்க விடுகிறார்.

- Advertisement -

இந்த மைதானம் பவுலிங்குக்கு நன்றாக கைகொடுத்த வேளையில் சூரியகுமார் யாந்த வந்த முதல் பந்தில் இருந்தே அடிக்க ஆரம்பித்து விட்டார். அவர் விளையாடும் ஒரு சில ஷாட்களை பார்த்தால் நம்மால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். அந்த அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அவரது அதிரடி காரணமாகவே களத்தில் நான் சற்று நேரம் எடுத்துக்கொண்டு பின்னர் ரன் குவிக்க ஆரம்பித்தேன் என்று கே.எல் ராகுல் கூறினார்.

இதையும் படிங்க : சற்றுமுன் : டி20 உலககோப்பை தொடரிலிருந்து காயத்தால் வெளியேறிய நட்சத்திர வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை நான் ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது அருகில் இருந்து பார்த்துள்ளேன். அவர் மிகச்சிறந்த டெத் பவுலர் என்பதில் சந்தேகமே கிடையாது. நிச்சயம் அவர் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை இனியும் வழங்குவார் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement