- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவுக்காக விளையாட இடம் கிடைச்சாவே போதும்.. ஆனா அதை சொல்ல மாட்டேன்.. ராகுல் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இதை அடுத்து அடிலெய்ட் நகரில் நடைபெற உள்ள இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.

அதில் ரோகித் சர்மா எந்த இடத்தில் விளையாடுவார் என்ற கேள்வி காணப்படுகிறது. ஏனெனில் அவருக்கு பதிலாக ஓப்பனிங்கில் முதல் போட்டியில் விளையாடிய ராகுல் ஃபார்முக்கு திரும்பி 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியில் கருப்பு குதிரையாக பெற்றார்.

- Advertisement -

ராகுல் பேட்டிங்:

எனவே அந்த ஜோடியை பிரிக்க விரும்பாத ரோஹித் சர்மாவும் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்தார். இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் எங்கே பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை ரோகித் தம்மிடம் கூறியுள்ளதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2வது போட்டியில் எங்கே பேட்டிங் செய்ய உள்ளேன் என்பதை என்னிடம் கூறியுள்ளார்கள்”

“ஆனால் அதை செய்தியாளர்களான உங்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்கள். நியூசிலாந்து தொடரில் நான் முழுமையாக விளையாடாததால் இந்தத் தொடரில் முதல் போட்டியில் துவக்க வீரராக விளையாடுவேன் என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதனால் இத்தொடருக்கு தயாராக எனக்கு போதுமான நேரம் கிடைத்தது. இங்கே ரன்கள் குவிப்பதற்கு என்ன செயல்முறைகளை பின்பற்ற வேண்டும் என்பனவும் எனக்குத் தெரிந்தது”

- Advertisement -

இடம் கிடைச்சா போதும்:

“இந்திய 11 பேர் அணியில் எனக்கு இடம் கிடைத்தால் மட்டும் போதும். அணிக்காக நான் களத்திற்கு சென்று சொல்லும் இடத்தில் விளையாடுவேன். குறிப்பாக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடிய ரன்கள் குவிக்க முயற்சிப்பேன். அதிர்ஷ்டவசமாக நான் ஏற்கனவே பல்வேறு இடங்களில் பேட்டிங் செய்துள்ளேன். ஆரம்பத்தில் அது மனதளவில் கொஞ்சம் சவாலாக இருந்தது”

இதையும் படிங்க: தோனியிடம் பேசி 10 வருஷம் ஆச்சு.. நாங்க பேசிக்கிறதில்ல.. காரணம் இது தான்.. ஹர்பஜன் ஆதங்கம்

“முதலில் 20 – 25 பந்துகளை எப்படி விளையாட வேண்டும் சவாலாக இருந்தது. ஆனால் பல்வேறு ஃபார்மெட்டில் விளையாடுவதால் அவை எளிதாகியுள்ளன. இருப்பினும் இம்முறை நான் முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளேன். அதனால் மற்ற இந்திய வீரர்களை போல் இதில் எனக்கு பெரிய அனுபவம் இல்லை. எங்கள் வீரர்களிடம் பேசி தேவையான விஷயங்களை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் பயிற்சிகளை எடுக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -