- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், கோலி, அஸ்வின் இல்லாததால்.. எல்லாரும் அதை என்கிட்ட கேட்டது வினோதமா இருந்துச்சு.. ராகுல் பேட்டி

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கிள் வெற்றி பெற்றது.

முன்னதாக இத்தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். அதற்கு முன்பாக டிசம்பர் மாதம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற்றார். அதனால் இத்தொடரில் இளம் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும் என்று பலரும் கணித்தார்கள்.

- Advertisement -

விராட், ரோஹித், அஸ்வின்:

ஆனால் முதல் போட்டியிலிருந்தே கில் தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்தியா தொடரை சமன் செய்து தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக பேட்டிங் துறையில் விராட், ரோஹித்துக்கு பின் 2வது அதிக அனுபவத்தைக் கொண்ட ராகுல் பொறுப்புடன் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றினார். அதனால் சுனில் கவாஸ்கருக்கு பின் ஒரு இங்கிலாந்து தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய ஒப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இந்நிலையில் இத்தொடரில் விராட், ரோஹித், அஸ்வின் ஆகியோர் இல்லாமல் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடியது வினோதமான உணர்வைக் கொடுத்ததாக ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவத்தை சீனியர் வீரர் என்ற முறையில் இளம் இந்திய வீரர்கள் தம்மிடம் கேட்டதாகவும் ராகுல் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சீனியர் ராகுல்:

“இத்தொடருக்கான இந்திய அணியில் சேர்ந்த போது ரோஹித், விராட், அஸ்வின் இல்லாதது என்னைத் தாக்கியது. இந்தியா ஏ அணிக்காக விளையாட 2 வாரங்கள் முன்னதாக இங்கிலாந்துக்கு வந்த போதே அவர்கள் இல்லாதது என்னைத் தாக்கியது. ஏனெனில் அவர்களுடன் தான் நான் என்னுடைய அனைத்து கிரிக்கெட்டையும் விளையாடினேன்”

இதையும் படிங்க: 4க்கு 4.. இங்கிலாந்தை திணறடித்து.. 1948 முதல் சந்தித்த 17 தொடர் தோல்விகளை நிறுத்தி வரலாறு படைத்த இந்தியா

“தற்போது அவர்கள் இல்லாதது எனக்கு கொஞ்சம் வினோதமான உணர்வைக் கொடுத்தது. அவர்கள் இல்லாததால் இங்கிலாந்தின் சூழ்நிலைகள் பற்றிய அனுபவத்தை மற்ற இந்திய வீரர்கள் என்னிடம் கேட்டனர். அப்போது தான் இளம் வீரர்களுக்கு உதவ வேண்டிய இடத்தில் நான் காலடி வைத்தேன். என்னுடைய அனைத்து அனுபவத்தையும் பயன்படுத்தி இந்த இளம் இந்திய அணிக்காக கையை உயர்த்தி நிற்க வேண்டிய சூழ்நிலை உருவானது” என்று கூறினார்.

- Advertisement -