மூன்றாவது நடுவரை கிண்டல் செய்த பஞ்சாப் கேப்டன் ராகுல். நடவடிக்கை எடுத்து தண்டனை அளிக்க வாய்ப்பு – விவரம் இதோ

Rahul
- Advertisement -

நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இடையே கடைசி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் 153 ரன்கள் மட்டுமே எடுத்தது அதன் பின்னர் ஆடிய சென்னை அணி 18.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் நன்றாக ஆடிய இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து இருக்கிறார். இதனை செய்த ஒரே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் இவர்தான் இவர். இந்நிலையில் இவர் ஆடிக்கொண்டிருந்த போது இளம் வீரர் ரவி பிஷ்னோய் பந்தில் தனது விக்கெட்டை இழந்து இழக்கவேண்டியது ஆனால் நடுவர் அவருக்கு விக்கெட் கொடுக்கவில்லை .

ருதுராஜ் அடித்த பந்தை மந்தீப் சிங் கேட்ச் பிடித்தார். இதை களத்தில் இருந்த நடுவர் விக்கெட் என்று கொடுத்த்தால் உடனடியாக மூன்றாவது நடுவரிடம் சென்று சோதனை செய்தபோது விக்கெட் இல்லை என்று முடிவு வந்தது. மந்தீப் சிங் பிடித்த கேட்ச் வந்து தரையில் பட்டது போல் இருந்தது இதன் காரணமாக மூன்றாவது நடுவர் பேட்ஸ்மேனுக்கு ஆதரவாக முடிவினை கொடுத்தார்.

ngidi

இதனால் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோர் கடும் கோபம் அடைந்தனர். அதன் பின்னர் பாப் டு பிளசிஸ் எளிதான கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

mandeep

இதனை பார்த்த கேஎல் ராகுல் வேண்டும் என்றே மூன்றாவது நடுவரை நோக்கி இதுவும் அவுட் இல்லையா ? அல்லது உண்மையில் விக்கெட்டு தானா ? என்பது குறித்து ஆக்சன் செய்து சர்ச்சை ஆக்கினார். சாதாரண கேட்ச் பிடித்து விட்டு மூன்றாவது நடுவரிடம் சென்று சோதித்து அவரை கிண்டல் செய்தார். இது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

Advertisement