- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜஸ்ட் மிஸ்.. 10 ரன்னில் சுனில் கவாஸ்கரின் சாதனையை தவறவிட்ட கே.எல் ராகுல் – விவரம் இதோ

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியானது நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

கவாஸ்கரின் சாதனையை தவறவிட்ட கே.எல் ராகுல் :

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்யும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டியானது தற்போது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான கே.எல் ராகுல் 10 ரன்கள் இடைவெளியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் மாபெரும் சாதனை ஒன்றினை தவறவிட்டார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தில் ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் கே.எல் ராகுல் இரண்டு சதம் மற்றும் 2 அரைசதம் என 10 இன்னிங்ஸ்களில் 532 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

- Advertisement -

இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்த இரண்டாவது இந்திய துவக்க வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே கடந்த 1979-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 542 ரன்களை குவித்த சுனில் கவாஸ்கர் ஒரு தொடரில் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து மண்ணில் 5 ஆவது இந்திய ஜோடியாக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – சிராஜ் மற்றும் பிரசித்

அவரது இந்த 46 ஆண்டுகால சாதனையை தற்போது வெறும் 10 ரன்கள் இடைவெளியில் கே.எல் ராகுல் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கே.எல் ராகுல் கச்சிதமாக பயன்படுத்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -