- Advertisement -
ஐ.பி.எல்

மீண்டும் ஐ.பி.எல் அணியின் கேப்டனாகும் கே.எல் ராகுல்.. எந்த அணிக்கு தெரியுமா? – விவரம் இதோ

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதே விறுவிறுப்பாக துவங்க ஆரம்பித்துவிட்டன. அதன் முதற்கட்டமாக அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடக்கும் என்றும் அதற்குள் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மீண்டும் ஐ.பி.எல் அணிக்கு கேப்டனாகும் கே.எல் ராகுல் :

அதன்படி இன்னும் சில தினங்களில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்கள் மற்றும் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது. அதேபோன்று இது ஒரு பக்கம் இருக்க டிரேடிங் முறையில் வீரர்கள் அணிமாற்றம் செய்யலாம் என்ற விதிமுறையும் இருப்பதினால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்துடன் அதிருப்தியில் இருக்கும் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேறி டெல்லி அணிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டு வருகிறது. மேலும் அப்படி சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறும் வேளையில் டெல்லி அணியில் இருந்து ஸ்டப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இந்த டிரேடிங் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி அணியில் விளையாடி வரும் நட்சத்திர இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் ஏற்கனவே லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்த வேளையில் கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக மெகா ஏலத்தில் வாங்கப்பட்டு முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது டெல்லி அணியிடமிருந்து டிரேடிங் முறையில் அவரை வாங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மேலும் டிரேடிங் முறையில் அவரை வாங்குவதோடு மட்டுமின்றி அவருக்கு கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற கொல்கத்தா அணி ரஹானேவின் தலைமையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளேஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.

இதையும் படிங்க : கடைசி 2 போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது.. காரணம் இதுதான் – விவரம் இதோ

இதன் காரணமாக 37 வயதான அஜின்க்யா ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து விடுவித்து கே.எல் ராகுலை புதிய கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய கே.எல் ராகுல் 53 ரன்கள் சராசரியுடனும், 150 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 539 ரன்களை குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -