IND vs BAN : அவர போய் நம்பலாமா, தோல்விக்கு காரணமே கேஎல் ராகுல் தான் – வாசிம் ஜாபர் அதிரடியாக விமர்சிக்கும் காரணம் என்ன

KL Rahul Wasim Jaffer
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. டாக்காவில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஒரு கட்டத்தில் 69/6 என சரிந்தாலும் முகமதுல்லா 77 ரன்களும் மெஹதி ஹசன் சதமடித்து 100* ரன்களும் எடுத்த அதிரடியில் 50 ஓவரில் 271/7 ரன்கள் குவித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்த நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சிகர் தவான், விராட் கோலி, ராகுல் போன்ற சீனியர்கள் சொதப்பினர்.

- Advertisement -

அதனால் 65/4 என திண்டாடிய இந்தியாவை 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்ற ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் அக்சர் படேல் 56 ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிருந்தனர். அதனால் வேறு வழியின்றி கட்டு போட்டுக்கொண்டு களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக 51* (28) ரன்கள் எடுத்த போதிலும் தீபக் சஹார், முகமது சிராஜ் போன்ற டெயில் எண்டர்கள் கை கொடுக்கத் தவறியதால் பரிதாபமாய் தோற்ற இந்தியாவை மண்ணை கவ்வ வைத்த வங்கதேசம் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று சொந்த மண்ணில் தங்களை புலி என்பதை நிரூபித்துள்ளது.

அவரை நம்பலாமா:

முன்னதாக இப்போட்டியில் 69/6 என சரிந்த வங்கதேசத்தை 148 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த முகமதுல்லா – ஹசன் ஜோடி தோல்வியை பரிசளித்தனர். ஆனால் அந்த நேரம் பார்த்து தான் ரோகித் சர்மா காயமடைந்து முதலுதவி எடுக்க சென்று விட்டதால் துணை கேப்டன் கேஎல் ராகுல் தற்காலிகமாக கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் அந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத அளவுக்கு சுமாராக கேப்டன்ஷிப் செய்த அவர் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணியை வழி நடத்திய போதே 0 – 3 (3) என ஒயிட்வாஷ் தோல்வியை சந்திக்கும் அளவுக்கு மோசமாக கேப்டன்ஷிப் செய்தார்.

KL Rahul

அதனால் ஏற்கனவே கேப்டன்ஷிப் செய்ய சரிப்பட்டு வர மாட்டார் என்று ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்ட அவர் ரோகித் சர்மா இல்லாத போது சுமாராக செயல்பட்டதே தோல்விக்கு காரணமாக அமைந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நம்மிடம் சிராஜ் மற்றும் அக்சர் படேல் போன்ற நல்ல பவுலர்கள் இருந்தனர். உம்ரான் மாலிக்க்கும் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் வங்கதேசம் அனைத்து கேள்விகளுக்கும் விடைகளை வைத்து செயல்பட்டது. அவர்கள் ஸ்ட்ரைக்கை மாற்றி அற்புதமாக பேட்டிங் செய்தனர்”

- Advertisement -

“அதை விட உங்களது கேப்டன் இல்லாத நிலைமையில் விக்கெட் கீப்பர் அணியை வழி நடத்துவது மிகவும் கடினமாகும். கேஎல் ராகுல் குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த கேப்டன் கிடையாது. அது தான் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அதை ஒரு காரணமாக நீங்கள் சொல்ல முடியாது. மாறாக நீங்கள் பாராட்டுகளை வங்கதேசத்துக்கு கொடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் 20 ஓவர்களுக்குப்பின் அவர்கள் 71/6 என்ற நிலைமையில் தான் இருந்தனர். ஆனால் அடுத்த 30 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 200 ரன்களை அடித்து விட்டார்கள்”

Jaffer

“அந்த வகையில் நாம் ஒரு நாணயத்தின் இரு பக்கத்தை அப்போட்டியில் பார்த்தோம். அதே போல் அந்தப் பார்ட்னர்ஷிப்பில் மெஹதி ஹசன் – ஆகியோர் விக்கெட்டை எடுக்கும் அளவுக்கு தவறு செய்யாமல் அபாரமாக பேட்டிங் விளையாடினர். முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மெஹதி ஹசன் இப்போட்டியிலும் சதம்டித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இருப்பினும் அந்த 2 போட்டியிலும் இந்தியா ஒரு கட்டத்தில் டாப்பில் இருந்தது. ஆனாலும் வங்கதேசம் வழியை கண்டுபிடித்து வெற்றி கண்டது” என்று கூறினார்.

Advertisement