- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எல்லாருமே தல ரசிகர்கள் தான்.. ராஞ்சி போட்டியைக் காண தோனி வருகிறாரா? கேப்டன் ராகுல் பதில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 0 – 2 (2) என்ற கணக்கில் இந்தியா 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடர் நவம்பர் 30ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துவங்குகிறது.

அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்காக தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகியுள்ளது. அத்தொடரின் முதலில் போட்டி முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்தியாவுக்காக ஏராளமான வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்துள்ள அவர் 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்று விட்டார்.

- Advertisement -

எல்லாரும் ரசிகர்களே:

தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தம்முடைய சொந்த ஊரான ராஞ்சியில் இந்தியா விளையாடும் போதெல்லாம் மைதானத்துக்கு வந்து ஆதரவு கொடுத்துள்ளார். அத்துடன் இந்திய அணியின் உடைமாற்றும் அறைக்கும் சென்று அவர் வீரர்களிடம் நலம் விசாரித்து தேவையான ஆலோசனைகளையும் கொடுத்துள்ளார். அதே போல இம்முறையும் அவர் மைதானத்துக்கு வந்து இந்திய அணிக்கு ஆதரவு கொடுப்பாரா? என்ற கேள்விக்கு காணப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் அனைவருமே எம்எஸ் தோனியின் ரசிகர்கள் என்று கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். எனவே இம்முறையும் அவர் மைதானத்திற்கு வந்து இந்திய அணிக்கு ஆதரவளித்தால் உற்சாகமடைவோம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ராகுல் பேசியது பின்வருமாறு. “நாங்கள் அனைவரும் தோனி தலைமையில் விளையாடி அவருடைய ரசிகர்களாக இருக்கிறோம்”

- Advertisement -

தோனி வருவாரா:

“ஒன்றாக விளையாடியுள்ள நாங்கள் நண்பர்களாகவும் இருக்கிறோம். தோனி போன்றவரை அறிந்திருப்பது ஸ்பெஷலானது. அவரைப் போன்ற வெற்றிகரமான இந்திய வீரரை பற்றி அறியும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. மனிதாபிமானம் கொண்ட அவர் மேலே நாங்கள் பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். ஒருவேளை அவர் மைதானத்துக்கு வந்து போட்டியைப் பார்த்தால் அது ரசிகர்களுக்கும் எங்களுக்கும் உற்சாகமாக இருக்கும்”

இதையும் படிங்க: ஷாஹித் அப்ரிடியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

“அவர் வந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். ரசிகர்களும் அதிகம் வருவார்கள். நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று தோனியையும் ரசிகர்களையும் மகிழ்விப்போம் என்று நம்புகிறேன். இந்திய அணிக்காக நாங்கள் போட்டியை வென்றால் தோனியும் மகிழ்ச்சியடைவார்” என்று கூறினார். இப்போட்டிக்கு முன் ஏற்கனவே தோனி இந்திய அணியை தனது வீட்டுக்கு வரவழைத்து விருந்தளித்தார். விராட் கோலியையும் காரில் அழைத்துச் சென்ற அவர் மைதானத்திற்கு வந்து இந்திய அணிக்கு ஆதரவளிப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -