ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடிய அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலிலும் தற்போது நான்கு வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இது என்னோட கோட்டை.. வெறித்தனமாக கொண்டாடிய கே.எல் ராகுல் :
இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணியாகவும் டெல்லி அணி இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது.
பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறிய டெல்லி அணிக்கு நான்காவது வீரராக களமிறங்கிய கே.எல் ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 53 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 93 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அதிலும் குறிப்பாக 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்த வேளையில் அதற்கு அடுத்து ஸ்டப்ஸ்-சுடன் இணைந்த கே.எல் ராகுல் 111 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து கே.எல் ராகுல் ஆக்ரேஷமான முறையில் தனது வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்த பின்னர் கே.எல் ராகுல் தனது பேட்டை மைதானத்தில் குத்தி ஆவேசமாக இந்த வெற்றியை கொண்டாடினார். இதற்கு காரணம் யாதெனில் :
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக பிரமாண்டமான சாதனையை நிகழ்த்தி உச்சம் தொட்ட – விராட் கோலி
கே.எல் ராகுலின் சொந்த ஊர் பெங்களூரு தான். எனவே இந்த மண்ணில் நான் எப்போதும் கிங் என்பது போல தனது மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பேட்டை தரையில் வைத்து இது என்னுடைய கோட்டை என்பது போல தெறிக்கவிடும் செலிப்ரேஷனில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



