- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அடப்பாவமே ராகுலுக்கு இப்படி நிலைமையா ? ரஞ்சி போட்டியில் ஏற்பட்ட பரிதாபம் – விவரம் இதோ

ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் கர்நாடக அணியும் மேற்குவங்க அணியும் மோதின. இந்திய அணியில் இடமில்லாத நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் கர்நாடக அணிக்காக ஆடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆரையிறுதி போட்டியிலும் அவர்கள் களமிறங்கினர். இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்குவங்க அணி 312 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதன் பின்னர் ஆடிய கர்நாடக அணி படு மோசமாக ஆடி வெறும் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சொதப்பியது .
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் வெறும் 26 ரன்களிலும், 5வதாக களமிறங்கிய மணிஷ் பாண்டே வெறும் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் வங்காள அணி 161 ரன்கள் எடுத்தது பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கர்நாடக அணியால் பெரிதாக சாதிக்க முடியவில்லை . அந்த அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் 2 பந்துகளில் தனது விக்கெட்டை இழந்து டக் அவுட் ஆனார்.

ஏதோ ஆடத்தெரியாத புதிய வீரரை போல் உள்ளே வரும் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இவ்வாறு புதிது புதிதாக ஒரு வழியை கண்டுபிடித்து தனது விக்கெட்டை இழந்து வருகிறார் ராகுல். இவர் இவ்வாறு ஆடுவது இந்திய அணிக்கு நல்லதல்ல, ஏன் என்றால் இந்திய அணிக்காக தொடர்ந்து ஆடி வரும் அவர் எந்த இடத்தில் இறங்கினாலும் சதம், அரைசதம் என அடித்து அசத்தி வருகிறார்.

அப்படி இருக்க இப்படி ஒரு வீரர் உள்ளூர் போட்டியில் இவ்வாறு ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் இந்திய தேர்வுக்குழுவின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக கர்நாடக அணி 176 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது இதன் காரணமாக மேற்கு வங்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

- Advertisement -
Published by