- Advertisement -
ஐ.பி.எல்

வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது.. மைதானமும் நல்லாதான் இருந்தது.. சி.எஸ்.கே விடம் தோற்ற பிறகு – கம்மின்ஸ் பேச்சு

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 46-ஆவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய சி.எஸ்.கே அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களையும், டேரல் மிட்சல் 52 ரன்களையும் அடித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக புவி, நட்டு, உனட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.

- Advertisement -

பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களில் சுருண்டது. அதன் காரணமாக சி.எஸ்.கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங்கை தேர்வு செய்தது பற்றியெல்லாம் நான் பெரிதாக யோசிக்கவில்லை. ஏனெனில் இந்த போட்டியிலும் எங்களுக்கு வெற்றிபெற நல்ல வாய்ப்பிருந்தது.

- Advertisement -

இருப்பினும் சி.எஸ்.கே அணியின் வீரர்கள் நன்றாக விளையாடி 210 ரன்களுக்கு மேல் குவித்து விட்டனர். எங்களுடைய பேட்டிங் ஆர்டரை வைத்து பார்க்கும் போது இது எட்டக்கூடிய இலக்கு தான். எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே தனித்தனியாக ஒவ்வொரு போட்டியில் வெற்றியையும் பெற்றுத்தந்துள்ளனர்.

இதையும் படிங்க : நடப்பு 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் முதல் நபராக விராட் கோலி படைத்துள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

இந்த போட்டியில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருந்தது. முதல் இன்னிங்சின் போதும் பனிப்பொழிவு இருந்தது. இந்த தோல்வியில் இருந்து நிச்சயம் எங்களால் பலமாக மீண்டு வரமுடியும் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -