- Advertisement -
ஐ.பி.எல்

காட்டுத்தனமா அடிப்பாங்கன்னு தெரியும்.. ஹைதராபாத்தை அவுட்டாக்கிய என்னோட 2 பிளான் இது தான்.. தேஷ்பாண்டே பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. ஏப்ரல் 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற 46வது லீக் போட்டியில் வலுவான ஹைதராபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 98, சிவம் துபே 39, டேரில் மிட்சேல் 52 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதை சேசிங் செய்த ஹைதராபாத் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 32 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தேஷ்பாண்டேவின் திட்டம்:
அதனால் புள்ளிப்பட்டியலில் 3வது முன்னேறிய சென்னையின் இந்த வெற்றிக்கு 98 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய ருதுராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரை விட அடித்து நொறுக்கக்கூடிய ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மாவை பவர் பிளே முடிவதற்குள் காலி செய்த தேஷ்பாண்டே 3 ஓவரில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

இந்நிலையில் பவர் பிளேவில் ஹைதெராபாத் அடித்து நொறுக்குவார்கள் என்றும் தெரிந்தும் பொறுமையுடன் செயல்பட்டது பலனை கொடுத்ததாக தேஷ்பாண்டே கூறியுள்ளார். அத்துடன் சரியாக வீசினால் ஒரு பந்தை எதிரணி அடித்தாலும் மற்றொரு பந்தில் கண்டிப்பாக விக்கெட் கிடைக்கும் என்பதே தம்முடைய திட்டமாக இருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பொதுவாக ஹைதராபாத் அணி பவர்பிளே ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். எனவே நாங்கள் வந்து வீச வந்த போது அவர்களுக்கு எதிராக பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதே திட்டமாகும். அது எங்களுக்கு பலனளித்தது. பவர் பிளேவில் அந்த லென்த்தை வீசுவது மிகவும் முக்கியம். ஒருவேளை அந்தப் பந்தில் நான் அடி வாங்கினாலும் மீண்டும் அதே லென்த்தில் என்னை அடிக்குமாறு பேட்ஸ்மேன்களிடம் சவால் விட்டேன். அது எனக்கு இன்று வேலை செய்தது”

இதையும் படிங்க: சதத்தை விட அதுக்காக அப்செட்டானேன் .. போட்டியை மாத்துனதே அவர் தான்.. ஆட்டநாயகன் ருதுராஜ் பேட்டி

“இன்று மைதானம் மிகவும் ஈரத்துடன் இருந்தது. எனவே சில பந்துகள் ஸ்விங்கானது. அதன் பின் ஸ்விங் கிடைக்கவில்லை. நாங்கள் பிட்ச்சை சரியாக பயன்படுத்தினோம் என்று நினைக்கிறேன். நாங்கள் குறிப்பிட்ட திட்டத்தை வைத்திருந்தோம். அதாவது அவர்கள் ஒரு நல்ல பந்தை அடித்தாலும் நாங்கள் எங்களுடைய திட்டங்களில் கவனம் செலுத்துவோம். அவர்களுடைய அதிரடிக்கு ஈர்க்கப்பட மாட்டோம் என்ற வகையில் பந்து வீசினோம்” எனக் கூறினார்.

- Advertisement -