- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முடிவுக்கு வந்த 9 ஆண்டு ஏக்கம்.. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் சாதித்து காட்டிய – கே.எல் ராகுல்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று அக்டோபர் 2-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

சொந்த மண்ணில் சாதித்து காட்டிய கே.எல் ராகுல் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 162 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது போட்டியின் இரண்டாம் நாளான இன்று உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்து 56 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் 192 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரியுடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இன்று அவர் அடித்த சதத்தின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 11-வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வுக்கு பிறகு நிரந்தர துவக்க வீரராக மாறிய கே.எல் ராகுல் தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்று அவர் அடித்த சதத்தின் மூலம் கே.எல் ராகுல் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார் என்றே கூறலாம். ஏனெனில் அவர் அடித்த இந்த சதம் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு 11-வது சதமாக இருந்தாலும் இந்திய மண்ணில் அவரது இரண்டாவது சதமாக பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : இந்த ஒரு விடயம் போதாதா? சாய் சுதர்சனை தூக்கிட்டு திலக் வர்மாவை கொண்டு வாங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

அதிலும் குறிப்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்த அவர் கடந்த 9 ஆண்டுகளாக இந்திய மண்ணில் சதம் அடிக்காமலே தடுமாறி வந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்த சதத்தை பூர்த்தி செய்து இத்தனை ஆண்டுகால ஏக்கத்தையும் நிவர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -