- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மூன்றாவது இந்திய வீரராக இங்கிலாந்து மண்ணில் கே.எல் ராகுல் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியானது நேற்று ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 224 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

கே.எல் ராகுல் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்களையும், சாய் சுதர்சன் 38 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து அணி சார்பாக அட்கின்சன் ஐந்து விக்கெட்டுகளையும், ஜாஷ் டங் மூன்று விக்கட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய கே.எல் ராகுல் 40 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் விளையாடிய இந்த 40 பந்துகளையும் சேர்த்து இங்கிலாந்து மண்ணில் மூன்றாவது இந்திய அணியின் துவக்க வீரராக ஒரு மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அது குறித்து விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை வைத்துள்ளது. அந்தவகையில் கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் அவர் எதிர்கொண்ட 40 பந்துகளோடு சேர்த்து இந்த தொடரில் அவர் இதுவரை 1038 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் 1000+ பந்துகளை எதிர்கொண்ட மூன்றாவது இந்திய துவக்க வீரராக இந்த சாதனையை கே.எல் ராகுல் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக சுனில் கவாஸ்கர் 1199 பந்துகளையும், முரளி விஜய் 1054 பந்துகளையும் எதிர்கொண்டு இந்த பட்டியலில் முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அந்த தோல்வியை தாங்க முடியாம விராட் கோலி கண் கலங்கி அழுதாரு.. 2019-ல் நடந்தது குறித்து – சாஹல் பேச்சு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -