அந்த தோல்வியை தாங்க முடியாம விராட் கோலி கண் கலங்கி அழுதாரு.. 2019-ல் நடந்தது குறித்து – சாஹல் பேச்சு

Chahal
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விராட் கோலி அழுவதை நேரில் பார்த்தேன் : யுஸ்வேந்திர சாஹல்

அதோடு பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான விராட் கோலி ஒரே அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடி வரும் வேளையில் அவரும் பெங்களூரு அணி வெற்றி பெற்ற போது மைதானத்தில் கண்கலங்கி அழுதபடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

மைதானத்தில் இப்படி விராட் கோலி உடைந்து அழுவதெல்லாம் எப்போதாவது தான் ஒரு முறை நடைபெறும் இந்நிலையில் விராட் கோலி மணமடைந்து அழுத ஒரு சம்பவத்தை இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான யூஸ்வேந்திர சாஹல் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

கடந்த 2019-ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டியின் போது நியூசிலாந்து அணியை எதிர்த்து நாங்கள் விளையாடினோம். அப்போது ஒரு கட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடிக்க முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியின் போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அனைத்து வீரர்களுமே கண்கலங்கியபடி இருந்தனர்.

- Advertisement -

அதிலும் கேப்டன் விராட் கோலி அந்த தோல்வியை தாங்காமல் பாத்ரூமிற்கு சென்று அழுததை நான் நேரில் பார்த்தேன். அப்படி அவர் கலங்கியபடி நின்றது மிக வருத்தமாக இருந்தது என யுஸ்வேந்திர சாஹல் கூறியிருந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அட்டகாசமான பார்மில் மிகச் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் அரையிறுதி போட்டியில் 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது இந்திய அணியின் தோல்விக்கும் வழி வகுத்தது.

இதையும் படிங்க : ரோஹித், கோலி இல்லனா என்ன? 46 வருட சாதனையை உடைத்த இளம் இந்தியா.. புதிய சரித்திர சாதனை

தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் கரியரில் மிகச் சிறப்பான பல போட்டிகளை கண்டுள்ள விராட் கோலி தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement