ரோஹித், கோலி இல்லனா என்ன? 46 வருட சாதனையை உடைத்த இளம் இந்தியா.. புதிய சரித்திர சாதனை

Indian Batters
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மெகா தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசி போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடும் இந்தியா முதல் நாளில் 204/6 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக இத்தொடருக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். அதனால் அனுபவமின்மை காரணமாக சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் முதல் போட்டியிலேயே வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 5 சதங்கள் அடித்து சாதனை படைத்தது.

- Advertisement -

விராட், ரோஹித் இல்லனா என்ன:

குறிப்பாக ரிசப் பண்ட் ஒரே போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையைப் படைத்தார். 2வது போட்டியில் இங்கிலாந்தை புரட்டி எடுத்த இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெளிநாட்டு மண்ணில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனைப் படைத்தது. குறிப்பாக 430 ரன்கள் விளாசிய கேப்டன் கில் பல சாதனைகளைப் புரிந்து பர்மிங்காமில் முதல் முறையாக இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

அதற்கடுத்தப் போட்டிகளிலும் ஓரளவு நன்றாகவே பேட்டிங் செய்து வரும் இந்திய அணி இதுவரை இத்தொடரில் மொத்தம் 3393* ரன்கள் குவித்துள்ளது. இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தங்களுடைய அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 1978/79 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா 6 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய போது 3270 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச சாதனை ரன்களாகும்.

- Advertisement -

கலக்கும் கில் படை:

அந்தத் தொடரில் 6 போட்டிகளில் அடித்த ரன்களை தற்போது கில் தலைமையிலான இளம் இந்திய அணி சவாலான இங்கிலாந்தில் 5 போட்டிகள் முடிவதற்கு முன்பாகவே அடித்து முறியடித்துள்ளது. மேலும் 1995க்குப்பின் உலகளவில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையையும் இந்தியா இத்தொடரில் பெற்றுள்ளது. இது போக இத்தொடரில் இந்தியா மொத்தம் 18* சதங்கள் அடித்துள்ளது.

இதையும் படிங்க: கடின உழைப்பாளி கருண் நாயர் இதை செய்யனும்.. இதுக்காக டெல்லியில் மணிகணக்கில் உழைச்சோம்.. பீட்டர்சன் பதிவு

இதன் வாயிலாக ஒரு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக சதங்களை அடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 1990 இங்கிலாந்து தொடரில் இந்தியா 15 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்த வகையில் விராட், ரோஹித் இல்லையென்றால் என்ன? இந்தியாவுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று இளம் பேட்ஸ்மேன்கள் நிரூபித்துள்ளார்கள்.

Advertisement