கோடிகளில் கிங் கோலிக்கே சவால் விட்டுள்ள லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் – புதிய சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தாங்கள் விரும்பும் 3 அதிகபட்ச வீரர்களை நேற்று தேர்வு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில் லக்னோ அணியில் கே எல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அகமதாபாத்தில் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், ரசித் கான் ஆகியோர் முதல் 3 வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

pbks

இமயம் தொட்ட கே.எல் ராகுல் :
இந்த ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக விளையாடப்போகும் லக்னோ அணி தங்களின் கேப்டனாக இந்தியாவின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் செயல்படுவார் என அறிவித்துள்ளது. இவரை ரூபாய் 17 கோடிகளுக்கு அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

- Advertisement -

ஆரம்ப காலகட்டத்தில் பெங்களூரு அணிக்காக விளையாடிய ராகுல் படிப்படியாக ரன்களை குவித்து பின்னர் நட்சத்திர வீரர் அந்தஸ்தை பெற்றார். அதன்பின் கோடிக்கணக்கில் விளையாடத் தொடங்கிய இவர் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேப்டனாகவும் செயல்பட்டார். பஞ்சாப் அணிக்காக மலைபோல ரன்களைக் குவித்த போதிலும் அவர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் ஒருமுறைகூட பிளே – ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

pbks

புதிய கேப்டன்:
இருப்பினும் வளர்ந்து வரும் இளம் வீரராக இருப்பதுடன் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்ட காரணத்தால் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான இந்திய அணிகளுக்கு முழுநேர துணை கேப்டனாக ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த அபரித வளர்ச்சி காரணமாக 17 கோடி ரூபாய்களுக்கு லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Rahul

கோலிக்கு நிகரான புதிய சாதனை:
இதன் வாயிலாக “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கோடி ரூபாய்களை சம்பளமாக பெற்ற வீரர்” என்ற சூப்பர் சாதனையை விராட் கோலியுடன் கே.எல் ராகுல் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி 17 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். தற்போது விராட் கோலியின் ராகுல் அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : மெகா ஏலம் : ஐபிஎல் 2022 தொடரில் இருந்து விலகியுள்ள 7 நட்சத்திர வீரர்களின் பட்டியல் இதோ

கடந்த 2013 ஆம் ஆண்டு வெறும் 10 லட்சத்துக்கு பெங்களூர் அணிக்காக முதல் முறையாக ஐபிஎல் தொடரில் காலடி வைத்த ராகுல் அதன்பின் 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய்க்கு ஐதராபாத் அணியில் விளையாடினார். 2016 – 2017 ஆம் ஆண்டில் மீண்டும் பெங்களூர் அணிக்காக விளையாடி ரன் மழை பொழியத்துவங்கிய இவரை பார்த்த பஞ்சாப் 11 கோடி ரூபாய்களுக்கு 2018 ஆம் ஆண்டு வாங்கியது. இனி லக்னோ அணிக்காக ராகுல் 17 கோடி ரூபாய்களுக்கு விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement