மெகா ஏலம் : ஐபிஎல் 2022 தொடரில் இருந்து விலகியுள்ள 7 நட்சத்திர வீரர்களின் பட்டியல் இதோ

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு மாநகரில் நடைபெற உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை, சென்னை உள்ளிட்ட பழைய 8 அணிகளும் லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட புதிய 2 அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர் மற்றும் சம்பளம் உள்ளிட்ட முழு விபரங்களையும் வெளியிட்டுள்ளன.

ipl trophy

- Advertisement -

விலகிய நட்சத்திரங்கள்:
இதை தொடர்ந்து ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்கும் அணிகளில் விளையாடப்போகும் எஞ்சிய வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலத்தில் உலகம் முழுவதிலிருந்து மொத்தம் 1214 வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளார்கள். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் தற்போது முதலே ஐபிஎல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

டேவிட் வார்னர் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க உள்ள நிலையில் சில முக்கிய வீரர்கள் காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்.

auction 1

1. கிறிஸ் கெயில் : இந்த மெகா ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான்கள் தனது பெயரை சேர்க்கவில்லை. இமாலய சிக்ஸர்கள், அதிரடியான சதங்கள் என ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள இவர் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

கடந்த சில வருடங்களாகவே பழைய பன்னீர்செல்வமாக இல்லாமல் ரன்கள் குவிக்க தடுமாறி வந்த அவர் தற்போது 42 வயதை கடந்து விட்டதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விடை பெற்றுள்ளார் என கருதப்படுகிறது. கடந்த 2008 முதல் இது வரை தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெற்றது ஐபிஎல் ரசிகர்களை சோகம் அடைய செய்துள்ளது.

ChrisGayle
Chris Gayle

2. மிட்சேல் ஸ்டார்க் : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்கும் எண்ணம் இருப்பதாக சமீபத்திய ஆஷஸ் தொடரின் போது தெரிவித்திருந்தார். குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் தங்களது சொந்த மண்ணில் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் வண்ணம் ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் அவரின் பெயர் இடம் பெறாததால் ஐபிஎல் 2022 தொடரில் அவர் பங்கேற்காதது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

3. ஜோ ரூட் : ஸ்டார்க் போலவே இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் ஜோ ரூட் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருப்பதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் முயற்சியை தியாகம் செய்வதாக ஜோ ரூட் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்துள்ளார்.

ben stroke

4. பென் ஸ்டோக்ஸ் : தற்போதைய தேதியில் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக விளங்கும் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து காயம் மற்றும் மனச்சுமை காரணமாக விலகினார். கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர் அதிலிருந்து குணமடைந்தது சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் விளையாடினார். இதனால் ஐபிஎல் 2022 தொடரில் அவர் விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்த வேளையில் இந்தத் தொடரில் பங்கேற்க தனது பெயரை பென் ஸ்டோக்ஸ் குறிப்பிடவில்லை.

- Advertisement -

5. ஜோப்ரா ஆர்ச்சர் : இங்கிலாந்தின் மற்றொரு வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக கடந்த வருடம் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகிய 2 தொடர்களில் இருந்து மொத்தமாக விலகினார். தற்போது காயத்திலிருந்து குணமடைந்தது இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ள போதிலும் ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்கும் முடிவை அவர் எடுக்கவில்லை.

sam curran

6. சாம் கரன்: கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரண் விளையாடினார். தனது திறமை மற்றும் சேட்டைகளால் சென்னை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவரை “சுட்டிக்குழந்தை” என சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினார்கள். ஆனால் கடந்த வருடம் காயத்தால் பாதியிலேயே விலகிய இவர் இன்னும் அதிலிருந்து குணமடையாத காரணத்தால் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

7. கிறிஸ் ஓக்ஸ்: இங்கிலாந்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் கிறிஸ் வோக்ஸ் கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் காயத்தால் விலகிய இவர் இன்னும் அதிலிருந்து விடுபடாத காரணத்தால் ஐபிஎல் 2022 சீசனிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement